‘நான் சிவனாகிறேன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா

0

Nan_Sivanagiren

எம்.என் கிரியேஷன்ஸ் வழங்கும் “நான் சிவனாகிறேன்” படத்தின் இசை வெளியீட்டு விழா, 07.05.2011 சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் கமலா திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பாடல் குறுந்தகட்டை இயக்குநர் எம்.ராஜேஷ் வெளியிட, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பார் சங்கத் தலைவர் இராம நாராயணன் பெற்றுக்கொண்டார். படத்தின் டிரைலரை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட, இயக்குநர் “பூ” சசி பெற்றுக்கொண்டார்.

விழாவில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், தயாரிப்பாளர் .சத்யஜோதி தியாகராஜன், நடன இயக்குனர் திருமதி கலா மாஸ்டர், கமலா தியேட்டர் உரிமையாளர் வி.என். சிதம்பரம் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை படத்தின் தயாரிப்பாளர் சி.கண்ணன் வரவேற்றுப் பேச, படத்தின் இயக்குநனர் வி.கே.ஞானசேகர் நன்றி கூறினார்.

‘நான் சிவனாகிறேன்’ படத்தில் உதய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆதித்யா, பிரேம்குமார், சுகுமார், ‘காதல்’ கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தவறு செய்பவர்களுக்கு கொடுக்கின்ற தண்டனைகள், தப்புக் கணக்குகளில் சேராது. தவறு செய்பவர்களைத் தண்டிப்பவர்கள் எல்லோரும் கடவுள் தான். அதேபோல் தான் இப்படத்தின் நாயகனும் தன்னைச் சிவனாக எண்ணிக்கொண்டு தவறு செய்பவர்களைத் தண்டிக்கிறான். தமிழ்ப்பட ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும் படமாக, காதல், செண்டிமென்ட், ஆக்சன் கலந்த படைப்பாக உருவாகியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் வி.கே.ஞானசேகர்.

கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, படத்திற்கு இசையமைக்கிறார் கே.எஸ்.மனோஜ். படத்தொகுப்பை மாரீஸ்வரன் கவனிக்க, படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், கே.நிஷாந்த், வி.கே.ஞானசேகர் எழுதியிருக்கிறார்கள்.

கலையை ராஜீ கவனிக்க, நடனத்தைத் தினா மற்றும் கேசவ் மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை ‘மாஸ்டர்’ லோகு அமைத்திருக்கிறார். படத்தை எம்.என்.கிரியேஷன்ஸ் சார்பில் சி.கே.தயாரித்திருக்கிறார்.

=====================================
தகவல் – மக்கள் தொடர்பாளர் சக்திவேல்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *