பி.பிரகாஷ்

 

புழுதிப்படர்ந்த சாலையின் நடுவே வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது.

ஜன்னலின் வழியாக எதயோ தேடிக்கொண்டிருந்தது, உள்ளே அமர்திருந்த ஸ்கூல் பசங்களின் கண்களும் , முன் இருக்கையில் அமர்திருந்த தலைமையாசிரியார் சுகவனத்தின் கண்களும்.

சிக்னலில் சிவப்பு லைட் விழுந்ததை கவனித்த ட்ரைவர் வண்டியை நிறுத்தினார். மீண்டும் நீல லைட் விழுந்தவுடன் வண்டியை கிளப்பினார்.

சற்று தொலைவில் ஒரு டீக்கடையில்  லேப்டாப்பில் செய்திகளை  படித்துக்கொண்டிருந்தவர்களிடம்  சென்ற சுகவனம் தன் கையில் இருந்த

ஒரு புகைப்படத்தை காட்டி இதை பாத்தீருங்காளா? என்றார் , அதைப்பார்த்த அங்கிருந்தவர்கள்,

இல்ல நாங்க பார்த்ததில்ல, இது என்ன?, என்று சிரிச்சிகிட்டே அவர்கிட்ட மறுபடியும் கேட்டனர்.

தலையை அசைத்தவாரே மறுபடியும் வண்டிக்கு வந்தார்,

செல்லும் வழியெல்லாம்  வெறும் தொழிற்சாலைகளும் , காற்றுகூட புகமுடியாதளவுக்கு நெருக்க கட்டபட்ட வீடுகளாகவும் தான் காட்சியாளித்தது.

மஞ்சள் சால்வை போத்தினது  போல் எல்ல இடமும் ஒரே புழுதியாக இருந்தது.

அங்க ஒரு இடதுல அழ்துளை  கிணறு தோண்ட அதிலிருந்து  தண்ணீர் வரம வெறும் ப்ளாஸ்ட்டிக் கழிவுகள் தான் தண்ணீரை போல வந்து கொண்டிருந்தது.

சுகவனமும் வழியில் செல்லும் ஒவ்வொருத்தர்கிட்டயும், அந்த போட்டவை காட்டி கேட்க யாருமே தெரியாதுனு சொல்லீடாங்க.

கடைசியாக அதைபார்த்த ஒருவர் எங்க தாத்தாவுக்கு தெரிஞ்சிருகணும் நினைக்கிறேன், வாங்க அவர்கிட்ட கேட்டு பார்ப்போம்.

அந்த புகைபடத்தை தனது சுருங்கிய  கண்ணால் விரித்து பார்த்த பெரியவர், இந்த இடத்த பாக்காணும்னா இன்னும் நீங்க 300 கீ.மீ போகணும் சொன்னாரு.

இதை கேட்ட சுகவனம் மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றிய சொல்லிவிட்டு அங்கிருந்தது கிளம்பினார்.

மாணவர்களும் மகிழ்ச்சியில் ஆரவரம் போட்டனர். சற்று நேரத்தில் அவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்த இடத்திற்கு வந்துவிட்டனர்,

பசங்களை வண்டியில் இருக்க சொல்லிவிட்டு சுகவனம் அலுவலகத்திற்கு சென்றார், தான் வந்த விபரத்தை காப்பாளரிடம் கூறினார்.

அதைக்கேட்ட காப்பாளர்  சாரி சார் இன்னைக்கு பர்மிஷன் தரமுடியாது, இன்னைக்கு மட்டுமில்ல, இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க பார்க்கமுடியாது, ஏன்ன எற்கனவே எல்லாம் டிக்கெட்டும் புக் ஆயிட்டு.

மூணு மாசத்துக்கு முன்னடியே  நீங்க புக் பண்ணிருக்கணும், அப்பதான்  நீங்க இப்ப பார்க்கமுடியும், இல்ல சார் எனக்கு தெரியாது, நாங்க ரொம்ப தூரத்துலேர்ந்து வர்றோம்,

பசங்கலெல்லாம் ரொம்ப ஆசையோட வந்தீருக்காங்க, இப்ப நீங்க பார்க்கமுடியாதுனு சொல்லீடிங்கனா ரொம்ப ஏங்கி போயிடுவாங்கா.

இதுவரைக்கும் எங்க ஸ்கூலேருந்து யாருமே அத பார்த்ததுயில்ல ,  சோ ,ப்ளீஸ் நீங்க தான் கொஞ்சம் உதவி பண்ணணும்.

என்ன? சார் இப்படி தொல்ல  பண்ணுறீங்க,

ஒரு நாளைக்கு 50 பேரதான் அனுமதிப்போம், இன்னைக்கு எல்லாமே புக் ஆயிட்டு,

சரி ஒண்ணு பண்ணுவோம், 15 நிமிசம் டைம் தர்றேன் அதுக்குள்ள போய் பார்த்திட்டு வந்திடணும் சரிய?,

ஒ,கே சார், அதுபோதும், சரி வாங்க என்று சொல்லி கேட்டை திறந்துவிட்டார். பசங்களை அழைத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார் சுகவனம்,

பசங்களும் சுகவனமும் கண்ட காட்சி அவர்களை ஆச்சர்யபடவைத்தது,

அவர்கள் வியப்புடன் பார்த்தது  முன்னே கம்பீரமாக நிற்கும் மரங்களைதான்.

நாகரீக வளர்ச்சியில் காடுகள்  அனைத்தும் அழிக்கப்பட்டதால் அந்த மாணவர்கள் அப்போதுதான்  முதல் முறையாக மரங்களை  பார்க்கின்றனர்

அவர்கள் முகத்தில் எல்லையில்ல மகிழ்ச்சி கரைபுரண்டு ஒடியது, சுகவனம் இதுதான் மரங்கள் என்று மாணவர்களிடம் கூறினார்.

அது என்ன? நிறம்  என்று மாணவர்கள் கேட்க, இதுதான் பச்சை நிறம் என்று விளக்கினார்.

இந்த காத்து ரொம்ப  சூப்பர இருக்கு, ஏதோ புது வாசம் அடிக்குது, இந்த காத்து வீச எவ்வளவு கரண்ட் செலவாகும், இதுக்கு எங்க சார் மோட்டார் இருக்கு,

இது எப்படி? சார் ஒரே கால்ல நிற்குது, என்று அடுக்குகடுக்காக கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர் மாணவர்கள்.

இதைக்கேட்ட சுகவனம் இதுதான்  சுத்தமான ஆக்ஸிஜன் உள்ள காத்து, இந்த மரத்துல பச்சையம் என்று ஒரு கெமிக்கல் இருக்கு, அதுனால்தான் இது பச்ச கலருல இருக்கு.

மரங்களே இல்லததால்தான்  பச்சை என்கிற நிறமே இல்லாம போயிட்டு, அதுனாலதான் உங்களுக்கு பச்சை கலரே எப்படி இருக்கும்ணு?தெரியில

இதுக்கு கிழ நிரைய வேர்கள் இருக்கும் அதுனால்தான் இப்படி நிற்குது .டேய் இலைகள பறிக்காதீங்க?

எங்க காலத்துல மரத்துக்கு கிழேதான் பாடம் நடத்துவாங்க  இப்ப உங்களுக்கு மரத்த பற்றியே பாடம் நடத்த வேண்டியாத இருக்கு, இப்படி ஃபோட்டோவிலும்,புக்லேயும் மட்டும் தான் பார்க்க வேண்டியாதிருக்கு ,என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே

அங்கு வந்த காப்பாளர் சார் உங்க டைம் முடிஞ்சிடுச்சி. நீங்க கிளம்புலாம் என்றார் .மிகுந்த மனவருத்ததுடன் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டனர்.

ஆரம்பத்துல இந்த இடம் முழுக்க சுற்றுலாத்தலமதான் இருந்திச்சு, கொஞ்ச கொஞ்சம இங்க இருக்கிற மரத்தயெல்லாம் காலிபண்ணி பேக்டரியாவும்,ப்ளாட்டாவும் ஆக்கீடாங்க,

கடைசிய இருக்கிறது இந்த இடம் மட்டும்தான், அதுனால்தான் இந்த இடத்த பத்திரம பாத்துக்கிறோம் என்று கூறிய காப்பாளருக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அப்போது காத்துல மரங்கள்  ஆடுவது அனைவருக்கும் டாடா காட்டுவது போல் இருந்தது.

மாணவர்களும் பதிலுக்கு  டாடா காட்டினர், அவர்களுடன் சேர்ந்த்து சுகவனமும் கையை அசைத்தார்.

வண்டிபுறப்பட்டு சென்றுக்கொண்டிருக்கும் போது சட்டென நின்றது,

முகத்தை துடைத்தவாறே எழுந்த சுகவனத்திற்கு அப்போதுதான்  தெரிந்தது தான் இதுவரை கண்டது கனவு என்று.

சுகவனம் அந்த ஊரில் வசிக்கும்  பெரிய பணக்காரர், அவருக்கு சொந்தமாக ஒரு பள்ளியும் நிரைய தோட்டங்களும் உள்ளது.

அவருக்கு சொந்தமாக  தோட்டத்தை  அழித்துவிட்டு ப்ளாட் போட  செல்லும்போதுதான் இந்த கனவு நடந்தது.

மரங்கள் இல்லன அந்த ஊரு  எப்படி இருக்கும் என்பதைத்தான் இவ்வளவு நேரமா அவருடைய  கனவுல வந்தது.

அதில் வந்த ஒவ்வொரு சம்பவமும் மனதில் ஈட்டியை போல் பாய்ந்தது.

என்னயா ?முழுச்சிகிட்டீங்களா? என்று கேட்ட ட்ரைவர்  மணியிடம் ஆமாம் இப்பதான் முழுச்சிகிட்டேன்.

எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்ய பார்த்தேன், என் மண்ண நானெ அழிகப்பாத்தேனெ, என்று மனசுக்குள்ளே நினைத்வாறே ,

ஸ்கூலுக்கு சென்ற சுகவனம்  மத்த ஆசிரியர்களையும் தனது  உதவியாளரையும் தனது ரூமுக்கு அழைத்தார்

இங்க இருக்குர மரத்தயெல்லாம் அழிக்கவேணாம், அப்படியே இருக்கட்டும்,

அதுமட்டுமில்ல ஏற்கனவே  நாம போட்டு இருக்கிற எல்லா ப்ளாட்டிலேயும் புதுசா மரங்கல வாங்கிட்டு வந்துபோட்டுங்க,

அத நம்ப ஸ்கூல் படிக்கிற ஒவ்வொரு பசங்ககிட்டேயும்  கொடுத்து நட சொல்லுங்க, அத அவங்களவிட்டே நல்ல பராமரிக்க சொல்லுங்க,

சரியா விளையாத மண்ணுல அந்த மண்ண டெஸ்ட் பண்ணி அதுக்கு  ஏத்த மாதிரி சரியான மரங்களையும், பயிர்களையும் போடுங்க,

அதுமட்டுமில்லாம நம்ப ஏரியாவுல இருக்கிற ஒவ்வொரு வீட்லேயும் ஒவ்வொரு மரம் கண்டிப்பா  வளக்கணும்ணு சொல்லுங்க,

பத்து வீட்டுக்கு ஒரு குப்பைதொட்டிய நம்ப செலவுலே வச்சி கொடுத்துடுங்க, குப்பையயெல்லாம் அதுல தான் போடனும்,

முடிஞ்சவரைக்கும் பிளாஸ்டிக் பொருள தவிர்க்க சொல்லுங்க .

இத கொஞ்சம் கவனமா ஃபாலோ  பண்ணங்க என்று சொல்லியதோடு மட்டுமில்லாமல் அதை சரியாக கையாளவும் செய்தார்.

அன்று முதல் அந்த ஊர் மற்ற ஊர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தது.

ஒரு நாட்டின் வளம் நன்றாக இருக்கனும் என்றால்- அந்த நாட்டிலுள்ள காட்டின் வளம் நன்றாக இருக்கனும். எனவே நாமும் மரங்களை  வளர்ப்போம். காடுகளை பாதுகாப்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *