பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???
பி.தமிழ் முகில் நீலமேகம்
வினோதினி… வித்யா….
இன்னும் எத்தனை
வனிதையர் ஆசிட்டின்
அகோரப் பசிக்கு
இரையாகி – துடித்து
பலியாயினரோ ???
காதல் வந்துவிட்டது –
உன்மேல் எனக்கு !!!
ஒற்றை வார்த்தையைக்
கேட்டதும் – உங்கள்
பின்னால் ஓடிவர
பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???
விரும்பியதாகவும் காதலித்ததாகவும்
கூறுகிறீர் – நீங்கள் விரும்பும் ஒன்றை
கண்ணெனக் காக்க மாட்டீரோ ??
விரும்பிய ஒன்றை
உருத் தெரியாமல் சிதைக்கவும்
மனம் ஒப்பிடுமோ ???
உங்கள் சகோதரிகளை
கண்ணென காத்திட
துடிக்கிறீரே – எல்லாப்
பெண்களும் எவரோ ஒருவரின்
சகோதரி தானென்பது
ஏன் உங்களுக்கு விளங்கவில்லை ???
வலியோர் அநீதி இழைத்துவிட்டு
சட்டத்தின் திரைக்குப் பின்
முகத்தை மறைத்துக் கொள்ள
இழப்பும் வலியும் ஏனோ
எளியோருக்கு மட்டுமே !!!
இறைவா !!! இனி
சிருஷ்டிக்கும் ஒவ்வோர்
பெண் சிசுவுக்கும்
உறுதியான பாதுகாப்பான
கவசத்தை கொடுத்து விடு !
ஏனெனில், உன் பிரபஞ்சத்தில்
பாவையருக்கு பாதுகாப்பு இல்லை !!!
படத்துக்கு நன்றி: http://www.vikatan.com/entrichy/2012/09/zjexod/images/blog-4.jpg
அருமை, அருமை தமிழ்முகில், பெண்மனதின் ஆதங்கத்தை மிகச் சரியாகப் பிரதிபலித்துள்ளீர்கள். நன்றி.
….. தேமொழி
மிக்க நன்றி சகோதரி !!!
மிக அற்புதமான கவிதை. பெண் மனதில் பொங்கும் தார்மீக ஆவேசத்தை மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். ‘பாவையருக்கு பாதுகாப்பில்லை’ என்பது மிக மிகச் சரி. படித்து முடித்ததும் உள்ளக் கொதிப்பால் கண்களில் நீர் துளிர்த்தது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
மிக்க நன்றி சகோதரி !!! நமது உள்ளக் குமுறல்களை கவிதைகளாக கொட்ட மட்டுமே முடிகிறது.வேறென்ன செய்ய??