சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி முதலிடம்
2010ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வி எஸ். திவ்யதர்ஷினி முதலிடத்தையும், மூன்றாம் இடத்தை செல்வன் ஆர். வி. வருண்குமாரும் பெற்றுள்ளனர்.
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பெருமைமிக்க சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் 2011 மே 11 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வி எஸ். திவ்யதர்ஷினி முதலிடத்தைப் பெற்றுள்ளார். ஹைதராபாதைச் சேர்ந்த செல்வி ஸ்வேதா மொஹந்தி இரண்டாம் இடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த செல்வன் ஆர். வி. வருண்குமார் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற முதல் 25 பேரில் 20 பேர் ஆண்கள், ஐந்து பேர் பெண்கள் ஆவர். இதில் 15 பேர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். ஐந்து பேர் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள். மற்ற ஐந்து பேர் வணிகம், நிர்வாகம், சமூக அறிவியல் பட்டம் பெற்றவர்கள்.
இறுதித் தேர்வில் பங்கு கொண்ட 2,589 பேர்களில் 920 பேர் இந்திய ஆட்சிப் பணி (ஐ ஏ எஸ்), இந்திய வெளிநாட்டுப் பணி (ஐ எஃப் எஸ்), இந்திய காவல் பணிக்கு (ஐபிஎஸ்) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற 920 பேரில் 56 பேர் மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
=====================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
ஜாம் ஜாம் என்று ஜமாய்த்துவிட்டாளடா!
டாம் டாம் என்று கொட்டி முழக்கடா!
பவ்யமாகவே வாழ்த்துவோமடா!
திவ்ய தர்ஷினிக்கு ஜே! போடுவமடா!
இன்னம்பூரான்
11 05 2011