அறுமுகநூறு (4)
சிதிலம் அடைந்த சிந்தனை கடந்து,
உதிரம் அடைந்த நஞ்சினைக் களைந்து,
எதிலும் நிலையா மனதை மறந்து,
கதியென் றறுமுகன் மதிமுகம் தொழுவோம்! 16
தா ளிரெண்டும் தீ யாக,
தோ ளிரெண்டும் பூ வாக,
மே னிஎங்கும் நீ ரோட,
வா என்றாய் தா விவந்தேன்! 17
பிடியோடு உறவாடும் உன்னண் ணனை,
பிடிசாம்பல் கொண்டாடும் உன்னப் பனை,
விடிவெள்ளி போலொளிரும் உன்னம் மையை,
படியேறி வருகையில் பாடுகின் றேன்! 18
கதிரேறி உச்சிக்கு வந்த பின்னும்,
படியேறு மிச்சைக்கு ஏது விண்ணம்?
நிலவேறு மிரவென்னு மினிய வெண்ணம்,
மனமேறிக் குளிர்வதால் படி ஏறுவோம்! 19
அரகரா! அரகரா! அதரங்கள் சொல்லும்,
சரவணா! சரவணா! சிகரங்கள் சொல்லும்,
முருகனே! முருகனே! என்றுமனம் சொல்லும்,
பரமனின் குமரனைப் பாடிடச் செய்யும்! 20
படத்துக்கு நன்றி: http://muruganarul.blogspot.com/2009/11/blog-post.html