தாய்க்குப்பெருமை சேர்த்த மகன்!….
விசாலம்
ஒரு தாயின் சொற்படி நடந்து அந்தத் தாய்க்குப் பெருமைச் சேர்க்கும் வண்ணம் ஒரு மகன் இருந்து விட்டால் அந்தத் தாய்க்கு அதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? ஆம் கொல்கத்தாவில் ஒரு ஏழைக் குடுமபம் இருந்தது
ஒரு தாயும் அவரது மகனும் , அவர்கள் சிறிய கிராமத்தில் வ சித்து வந்தனர் தாய் மிகவும் சிரமப்பட்டு உழைத்து மகனை படிக்க வைத்தார் .மகனும் தெருவில் இருக்கும் விளக்கின் அடியில் அமர்ந்து படிப்பான் படிக்கும் நேரம் தவிர அவனும் மிகக் கடுமையாக உழைத்தான் ,உழைப்பின் பலன் கிடைத்தது காலேஜும் சேர்ந்து பின் துகலைப் பட்டப் படிப்பும் படித்து முதல் இடத்தில் தேறினார் பின் மேடையிலும் பேச ஆரம்பித்து சிறந்த பேச்சாளராகவும் ஆனார் .மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் பேசியதால் அவர் பேச்சைக் கேட்கக் கூட்டம் அதிகம் வரும் இத்தனை இருந்தும் ப்ல மாதங் ள் வேலைக் கிடைக்காமல் இருந்ததால் வீட்டில் வறுமை மிகுந்தது தாய்க்கும் வயதானதால் முன்பு போல் வேலைச் செய்யமுடியவில்லை ஆகையால் கஞ்சி வைத்து குடிப்பார்கள் தாய் தனக்கு இல்லாமல் தன் மகனுக்கு அளிப்பார் மகனோ ஆசையுடன் தாய்க்கு அளிப்பார் இத்தனைக் கஷ்டப்பட்டவர் பிற்காலத்தில் யாவரும் போற்றும் மகன் ஆனார் அவர்தான் திரு ஈச்வர சந்திர வித்யாசாகர்
பல நாட்கள் பொறுமையாக இருந்த பின் அவருக்கு நல்ல வேலைக் கிடைத்து முதல் சம்பளம் வாங்கியதும் தன் தாயிடம் ஓடி வந்து அவர் பாதங்களில் வைத்து “அம்மா எனக்காக் நீங்கள் எத்தனைக் கஷ்டப் பட்டிருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும்? நான் உடனே வாங்கித் தருகிறேன் “என்றார்
அதற்கு அந்தத் தாய் ” எனக்கு இப்போது ஒன்றும் வேண்டாம் தகுந்த நேரம் வரும் போது நானே கேட்கிறேன் ” என்றார்
ஒரு சமயம் தாயுடன் கிராமத்தில் நட்ந்த ஒரு சந்தைக்கு ஈச்வர சந்தரவிதயாசாகர் புறப்பட்டார் தாய் மிகுந்த பழைய புடவையைக் கட்டிக் கொண்டு கிளம்பினார் , உடனே மனம் பொறுக்காமல் கடையிலிருந்து நாலு புது புடவைகள் வாங்கித் தன் தாயிடம் தந்தார் .
“அம்மா இந்தாருங்கள் இப்போதாவது சொல்லுங்கள் ,,உங்களுக்கு என்ன வேண்டும்”
மகனே நமது கிராமத்தில் சிறந்த பள்ளிகூடம் இல்லை வெகு தூரம் நட்ந்து சென்றால் தான் ஒரு பள்ளி வருகிறது அந்தக்குழந்தைகள் பத்திரமாகத் திரும்பி வரும் வரை பெற்றோர்கள் தவித்துப் போகிறார்கள் ஆகையால் நான் மூன்று ஆபரணங்களைக் கேட்கப் போகிறேன் முதல் ஆபரணம் நமது கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் அதை நீதான் கட்டிக் கொடுக்க வேண்டும்”
மகனின் கண்களில் கண்ணீர் வழிய தாயின் ஆசையைப் பூர்த்திச்செய்தார் , பின் கொஞ்சக்காலம் கழிந்தப்பின் ” இரண்டாவது ஆபரணம் எது அம்மா “? என்று கேட்டார் அப்பா மகனே கிராமத்து மக்கள் குடிநீருக்காக மிக கஷ்டப்படுகின்றனர் ஆகையால் கிரமத்திற்கு குடிநீர் வரவழைக்க எதாவது வழி செய் இதுதான் என் இரண்டாவது ஆபரணம் ” திரு வித்யாசாகரரும் பல இடத்தில் குழாய்கள் கிணறுகள் வைத்து அந்தக் கிராமத்தை வசதியாக்கினார் தாயின் மனமும் மகிழ்ச்சி அடைந்தது
ஒருநாள் தெருவில் வந்துக் கொண்டிருக்கையில் ஒரு யாளியைப்பார்த்து மனம் வருந்தினார் அந்தத் தாய் உடனே தன் மகனிடம் “மகனே என் மூன்றாவது ஆபரணம் கேட்கும் நேரம் வந்து விட்டது பள்ளிக்கூடம் அமைத்தாய் குடிநீரும் கொடுத்தாய் இப்போது அவர்களுக்கு ஒரு மருத்துவ மனையும் கட்டிக் கொடுத்து விடு ” தன் தாயை அன்புடன் அணைத்துக் கொண்டார் அவர் உடனே அவர் ஆசை நிறைவேறியது
தன் மகனை அணைத்துக் கொண்டு “ஒரு தாய்க்கு உன்னைப் போன்று ஒரு மகன் இருந்தால் போதும் உலகமே சுவர்க்கமாகிவிடும் ‘ என்று நெஞ்சு தழுக்கக் கூறினாள் ஸ்ரீசத்யசாயி பாபா சொன்ன உண்மைச் சம்பவம் இது