இலக்கியம்கவிதைகள்

திருமுருகன் துதிமாலை (1)

 

சத்தியமணி

பங்குனி  உத்திரம்  நினைவாக (நொய்டாவில் முருகன் ஆலய குடமுழுக்கில் அறுமுகனுக்கு அர்ப்பணித்தது)

அம்மாவின் மடியில் சிம்மாசனம் செய்து

அரசாளும் ஆறுமுகனே

இம்மாகலி காலத் தீவினைகள் அகற்ற

இடம் கண்டு வந்த சிவனே

சிம்மாளம் கண்டு சிரிப்பான வதனத்தால்

சிறைசெய் தமிழ் கள்வனே

பம்மலால் படைவீடு குடிகொண்ட கந்தா

பட்டாடைச் சுற்றும் அழகா

மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

விளையாடும் வேலகுகனே

துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

முகங்காட்டும் சக்திமகனே       (1)

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  சக்தி மகன் புகழை சந்ததமும் துதிக்கும் சத்தியமணி அவர்களின் கவிதை முத்து நவரத்தினத்தை விஞ்சும் பக்தியின் ஒளி கொண்டு மிளிர்கிறது. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள் திரு.சத்தியமணி அவர்களே!!!

 2. Avatar

  கோபம் கொண்டு மலையேகி
  குன்றமெல்லாம் நிறைந்திருக்கும்
  குன்றாத தமிழ்ப் பெருநிதிக்கு
  அழகிய பாமாலை பாவலரே…

  கவிஞருக்கே உரித்தான உயர்வு நவிற்சியுடன்
  அழகுற கவி படைத்தீர்கள் அழகின் வேந்தனுக்கு….

  அன்பன்
  மகேந்திரன் பன்னீர்செல்வம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க