ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே (பகுதி 3)
சத்தியமணி
காஞ்சியில் காமாட்சி மதுரையில் மீனாட்சி
தில்லியம் பதியில்ஆளும் தேவியே வாழியவே
ஆஞ்சியில் மன்னர்நாட தலைநகர் வந்துஆள
கொற்றவை கொடிபிடித்த கொலுவீற்று வாழியே
நாஞ்சிலின் நுனிகண்ட நாரணி சீதையாகி
மங்கள நாண்காக்கும் மாதாவே வாழியவே
ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே
எல்லா நலங்களும் எமக்கருள்வாயே ! 5
வித்தையில் விஜயனாக பக்தியில் அனுமனாக
சங்கீத மாமேதை நாரத முனிவனாக
சித்திரை கதிராக சிங்கார வேலனாக
மதியில் கண்ணனாக கவிதையில் தாசனாக
இத்தரையில் உதித்த ஞானியர் வடிவமாக
என்றும் வாழியவே ! எம்உடனுறை வாழியவே
ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே
எல்லா நலங்களும் எமக்கருள்வாயே ! 6
பக்தியில் பதித்து அனுதினம் துதித்து
சக்தியின் தாளிலே சரணமடைந்தேன்
வெற்றியை தருவாய் வினைகள் களைவாய்
பற்றினேன் உன்பதமலர் அடியே
தாயின் மலரடி போற்றி போற்றி
குருவின் மலரடி போற்றி போற்றி