வார ராசி பலன்: 22.04.2013 – 28.04.2013
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: நினைத்த இலக்கை அடைய அதிக தன்னம்பிக்கையும், உற்சாகமும் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவி இடையே அன்னியோன்யம் இருக்கும். பண விஷயங்களில் மட்டும் யாருக்கும் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். முதியவர்களின் உடல் நலனில் கவனமாக இருந்தால், மருத்துவச் செலவுகளை குறைத்து விடலாம். உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம்.
ரிஷபம்: நீண்ட நாட்களாக முடிவுக்கு வராத பிரச்னைகள் முடிவுக்கு வருவதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நலம். பொறாமை இல்லாமல் ஈடுபடும் போட்டிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். விருந்தினர் வருகையும், சுபச் செலவுகளும் கூடும். அலுவலகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி, உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வீடு, மனை வாங்கி விற்பவர்கள் அகலக் கால் வைக்க வேண்டாம்.
மிதுனம்: “என் வாழ்க்கை என் கையில்” என்று செயல்படுங்கள். பிரச்னைகள் பிசுபிசுத்து விடும். சண்டை சச்சரவுகளை விலக்கினால், குடும்பம் அமைதிப் பூங்காவாய் திகழ்வது உறுதி. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் வீண் விரயம் ஏற்படாமல் செயல்பட, இரட்டிப்பு லாபம் வந்து சேரும். ஒரு சிலர் ஆன்மீக யாத்திரை சென்று வருவார்கள். கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஒரு புதிய திருப்பம் உண்டாகும். பத்திரிகைத் துறையில் உள்ளவர்களின் தகுதி உயரும் தருணமிது.
கடகம்: மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு இடமளிக்க வேண்டாம். கணவன் வழி உறவினர்களுடன் இருந்த சிறு மோதல்கள் விலகும். வேலையில் உள்ளவர்கள் மன உளைச்சலை தீர்க்கப் புதிய வழிகளைக் கண்டு பிடிப்பார்கள். வீடு, வாசல் அமையவில்லையே என்று சிரமப் பட்டவர்கள், கிரகப் பிரவேசம் செய்து மகிழும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். எதையும் தீர ஆலோசித்துச் செய்தால் குடும்பத்தில், வீண் குழப்பங்களும், விவாதங்களும் தலை தூக்காமலிருக்கும்.
சிம்மம்: பணியில் இருப்பவர்கள், தனி நபர் விமர்சனத்தைத் தவிர்க்கவும். பொறுப்பாக நடந்து கொள்ளும் பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையாட்களின் போக்கை உணர்ந்து வேலை வாங்க, புதிய ஒப்பந்தங்கள் பல உங்கள் கை வசமே! வீட்டை விரிவுபடுத்துவதில் பணம் செலவழியும். போட்டிகள் கடுமையாய் இருந்தாலும், ஈடு கொடுத்து வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் தன் அபரிமிதமான ஆற்றல் கொண்டு உயர்வடைவார்கள். புதியவர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. ஒரு சில மாணவர்கள் மேற்படிப்பிற்காக வேறு ஊர்களுக்குச் செல்வர்.
கன்னி: வியாபாரத்தில் உயரும் வருமானத்தைக் கொண்டு புதிய கிளைகள் திறக்கும் வாய்ப்புக் கிட்டும். உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூர்விகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் சுமூகமாக முடிவதால், பிரிந்திருந்த உறவுகளுடன் மீண்டும் இணைந்து, சுற்றுலா, விழா என்று மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் உரசல்களைப் பெரிது படுத்த வேண்டாம். சக கலைஞர்களுடன் கவனமாகப் பழகி வந்தால், உளைச்சலையும், அலைச்சலையும் தவிர்த்து விடலாம்.
துலாம்: கை மாற்றாய் வாங்கியிருந்த கடனைத் தீர்த்து விடுவீர்கள். தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி வர, சுப காரியங்கள் விரைவில் முடிவாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்தால் கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் குறைவிலா லாபம் கிட்டும். தற்காலிக வேலையில் இருப்பவர்களின் பணி நிரந்திரமாகும். பிள்ளைகளின் உயர்வுக்கு என்று பட்ட பாட்டுக்கு நல்ல பன் கிடைக்கும். வெளியூர் செல்பவர்கள் உணவு, குடிநீர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
விருச்சிகம்:கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருந்து இலக்கை எட்டுவார்கள். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவதால், பழைய கசப்புகள் மறைந்து விடும். மாணவர்கள் கடுமையாய் உழைத்து, தவறிய பாடங்களில் தேர்ச்சி பெற்று மகிழ்வர். திடீர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், பெண்கள் அதனைத் திறம்பட சமாளித்து விடுவர். வேலையில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகளும், உயர்வும் கிடைக்கும். மருத்துவச் செலவுகளைக் குறைக்க, படபடப்பையும், தூக்கமின்மையும் தவிருங்கள்.
தனுசு:தேடி வரும் ஒப்பந்தங்களை, திறம்பட முடிக்கும் கலைஞர்களுக்குப் பாராட்டோடு, பரிசும் வந்து சேரும். பங்குச் சந்தையில், நிலவரத்திற்கேற்றவாறு சமயோசிதமாகச் செயல்பட்டால், போட்ட பணத்தை எடுத்து விடலாம். பணத் தட்டுப்பாடு நீங்க சிக்கன நடவடிக்கை கை கொடுக்கும். விமர்சனங்களைத் தாண்டி, வேலைகளை முடிப்பதில் கவனம் காட்டினால், உயர் பதவிக்கான வாய்ப்புக்கள் உறுதிப் படும். நிதானமான போக்கை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு, நெருக்கடிகள் தானே குறைந்து விடும்.
மகரம்: தேவையற்ற கோபத்தைத் தவிர்த்தால், குடும்ப உறவுகளின் நெருக்கம் கூடும். குழந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஒரு வரைமுறை வைப்பது அவசியம். வெளிவட்டாரப் பழக்கத்தில், இதமான அணுகுமுறை விரும்பிய பலனைத் தரும். தொழில், வியாபார முன்னேற்றத்தில், கூடுதல் உழைப்போடு, சீரான திட்டங்களையும், சேர்த்துக் கொள்வது அவசியம். பணியில் இருப்பவர்கள் எதிர்பாராத இடமாற்றங்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.
கும்பம்: புதிய தொடர்புகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் கிட்டும். கடன் நிலவரத்தில் கூடுதல் கவனமிருந்தால், வரவுக்குள் செலவை முடித்துக் கொள்ளலாம். பொது விஷயங்களில் ஒத்த கருத்தை அடைய, அதிக முயற்சியும், பொறுமையும் தேவை. உறவினர் கேட்ட உதவிகளை சிரமப்பட்டு செய்து முடிக்கும் நிலை நிலவும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலைகளில் தொய்வில்லாமல் இருக்க, வேகத்தோடு விவேகத்தையும் சேர்த்துக் கொண்டாலே நல்ல பலன் கிட்டும்.
மீனம்: குடும்பத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுச் செயல்படும் காலமிது. வியாபர வரவை அதிகரிக்கப் புதிய யுக்திகள் கை கொடுக்கும். ஞாபக மறதிக்கு இடமளிக்காமலிருந்தால், மாணவர்களின் கைப்பணம் கரையாது. அலுவலக வட்டத்தில், வீண் வம்புகளில் ஈடுபடுவதைத் ததவிர்த்து, வேலையில் விழிப்பாய் இருப்பார்க்கு, சிறப்பு சலுகைகளை வந்து சேரும். தொடர்ந்து மேற்கொள்ளும் பயணங்களால், சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தலை காட்டுவதைத் தவிர்க்க சத்தான உணவைச் சாப்பிடவும்.