சிறந்த அரசு அலுவலருக்குப் பிரதமர் விருது

0

பொது நிர்வாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த பணியாற்றியவர்களுக்கு பிரதமர் விருதுகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

மத்திய, மாநில அரசு பணிகளில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக ஏற்றுக்கொள்ளும் வகையில் பணியாற்றிய அலுவலர்களுக்கும் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்தவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுப் பணிகளில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் தனியாகவோ, குழுவாகவோ அல்லது அமைப்பின் மூலமோ விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள், ஜுலை15, 2011 ஆகும். இது குறித்து மேலும் தகவல் பெற நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் இணையத்தளத்தை அணுகவும் இணையதள முகவரி: www.darpg.nic.in ஆகும்

==================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *