தமிழர் கடலில் நடப்பது என்ன?: சச்சி உடன் குரல் நேர்முகம் – பகுதி 3
செவ்வி: அண்ணாகண்ணன்
மறவன்புலவு க.சச்சிதானந்தன், பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர். கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர். இவரை 2011 ஏப்ரல் 16 அன்று, சென்னையில் வல்லமை ஆசிரியர் அண்ணாகண்ணன், நேர்கண்டார்.
இந்திய மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதிகள், பாக்கு நீரிணை, மன்னார் குடா என அழைக்கப்பெறுகின்றன. இவற்றை இங்கே தமிழர் கடல் என்ற பொதுப் பெயரால் அழைக்கிறோம். இந்தத் தமிழர் கடலில் மீனவர்கள் கொல்லப்படுவது ஒரு புறம் இருக்க, இந்தக் கடல் வளத்தை யார், எவ்வளவு பயன்படுத்தலாம் என்பதிலும் இரு கரையில் உள்ள மீனவர்களிடம் கருத்து முரண்பாடுகள் உள்ளன. இவையும் தவிர, மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்தவோ, மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவோ வலுவான முயற்சிகள் இன்னும் எடுக்கப்படவில்லை. நீலப் புரட்சி, இன்னும் கனவாகவே நீடிக்கிறது. இந்நிலையில் சச்சிதானந்தன், கடல் வளத்தை இரு கரை மீனவர்களும் பகிர்ந்துகொள்வது முதல் மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்துவது வரை பற்பல அரிய யோசனைகளை இங்கே நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதன் முக்கியத்துவம் கருதி, இந்த நேர்முகத்தைச் சில பகுதிகளாக வெளியிடுகிறோம். (முதல் பகுதி | இரண்டாம் பகுதி)
மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியைக் கீழ்க்கண்ட தளத்தில் கேட்கலாம்.
http://www.4shared.com/audio/JVxqaSw3/sachi_interview_Final3output_2.html
நேர அளவு: 23 நிமிடங்கள்
மெல்லிசை: வசந்தி சுப்பிரமணியன்