இலக்கியம்கவிதைகள்

ஒன்றானது…

செண்பக ஜெகதீசன்           

 

கருவறை இவர்க்குப் பொதுவானது

காட்சி என்றும் எதிர்பார்ப்பது,

உருவினில் அழகின் இடமானது

உரைக்கும் முறுவல் மொழியானது,

பெருகிடும் அன்பே ஊற்றானது

பேசிடா தென்றற் காற்றானது,

திருவருள் தெய்வச் சிலையதுவும்

தீதிலாக் குழந்தையும் ஒன்றன்றோ…!

 

       http://www.hiren.info/desktop-wallpapers/babies-pictures/surprised-child-looking                         

Print Friendly, PDF & Email
Share

Comments (6)

 1. Avatar

   குழந்தையும் தெய்வமும் ஒன்றென்பதை அழகுறச் சொல்லும்  குறுங்கவிதை. அருமை!!. மிக்க நன்றி.

 2. Avatar

  நீங்கள் பகன்றிட்ட மொழியானது 
  செவியில் பாய்ந்திட்ட தேனானது…

 3. Avatar

  குழந்தையே தெய்வம் எனும் கருத்துக்கு இன்னுமொரு அழகான கவிதை. அருமை.

 4. Avatar

  அருமை.
  தரிசனம் தருவதும் தந்ததும் மறைகின்ற‌
  குழந்தையும் தெய்வமும் ஒன்றானது

 5. Avatar

  அழகான ஒப்பீடுகள். வாழ்த்துக்கள் திரு.செண்பக ஜெகதீசன் அவர்களே!

 6. Avatar

  திருவாளர்கள் பார்வதி இராமச்சந்திரன், மகேந்திரன், தனுசு. சத்தியமணி, சச்சிதானந்தம் ஆகியோரின் பண்பட்ட பாராட்டுரைக்கு மிக்க நன்றி…!
  -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க