சினிமா எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஆர்.சிவகுமார் காலமானார்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வெளிவரும் சினிமா எக்ஸ்பிரஸ் இதழின் ஆசிரியர் ஆர். சிவகுமார் 2011 மே 22 அன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49.
இரு நாட்களுக்கு முன்னர் சுவாசக் கோளாறு ஏற்பட்டு, மூச்சுத் திணறல் இருந்துள்ளது. இதனால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 2011 மே 21 அன்றும் சுவாசக் கோளாறு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மே 22 அன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வெளிவந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அதன் தொடக்க காலத்தில் இருந்து ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
ஆர். சிவகுமாரின் வீட்டுத் தொடர்பு எண்: 044-28343403 / 9282438181
இதழாசிரியர் ஆர். சிவகுமாரின் மறைவுக்கு வல்லமை, தன் இரங்கலைத் தெரிவிக்கிறது.
=====================================
தகவல்: மக்கள் தொடர்பாளர் ஜி. பாலன்
It is so sad that Siva has passed away at such an young age and so suddenly leaving behind a very young family.
It must be really hard for his wife, son and daughter. We pray to God to give all the strength that this young family needs at this difficult time.
Hari Iyer
London
We are extremely saddened to hear the loss of our beloved Siva (mama). Our heartfelt condolences to his family. May his soul rest in peace. God bless his family.
Gayathri Rajaraman
Australia
Very shocked and shakened by the sudden death of Shiva-. Our heart felt condolences to his wife and young kids. Only GOD has to give us the strength to overcome this difficult time.
uma vijai
melbourne