‘குருகுலம்’
செல்வரகு
(திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 pm மணிக்கு)
நம் பாரம்பரியமான வாழ்க்கை முறை மற்றும் புராணம், ஸ்தோத்திரம், வேத
மந்திரங்கள் குறித்த அறிவை வளர்த்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ‘குருகுலம்’ என்ற நிகழ்ச்சி சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.
ஸ்ரீமத் பகவத்கீதை, அம்பாளின் திவ்ய நாமங்களை கொண்ட லலிதா ஸஹஸ்ரநாமம் போன்றவற்றை மாணவர்கள் உரையாடல் மூலம் கற்றுக்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்ட அம்ருத பிந்து என்ற நிகழ்ச்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதை போன்ற நிகழ்ச்சியின் தேவை குறித்து அறிந்து கொண்ட சங்கரா டிவி “குருகுலம்” என்ற நிகழ்ச்சியை வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5pm மணிக்கு ஒளிபரப்புகிறது.
கிராம மக்கள் உட்பட,இந்தியா முழுவதும் இருந்து பலர் இதை போன்ற நிகழ்ச்சி தேவை என்றுவலியுறுத்தியதை தொடர்ந்து குருகுலம் தொடங்கப்பட்டது.
நம் தேசத்தில், சிறுவர்களும், சிறுமிகளும் தேவதா ஸ்தோத்திரங்கள்,மந்திரங்கள் போன்றவற்றை கற்று வருவது குறைந்து வருவதற்கான காரணம், தகுதிவாய்ந்த ஒரு குரு மூலம் இவற்றை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமையாததே ஆகும். சிறுவர்களும் கற்றுக்கொள்ளும் விதத்தில் எளிமையான ஸ்லோகங்களில் தொடங்கி படிப்படியாக சற்று சிரமமான ஸ்லோகங்களை கற்று தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதே இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும். வேத பண்டிட் கே. எல். ஸ்ரீநிவாசன் மூலம் கற்றுத்தரப்படும் இந்நிகழ்ச்சி குறித்து பல தரப்பட்டமக்கள் தங்களின் சந்தோஷத்தையும்,
திருப்தியையும் தெரிவித்துள்ளனர்.