அந்த நேரம்…
மேலே வானத்து மேகங்களுக்கு
மேலைக் கடல்விழும் சூரியன்
மேலாய்த்
தங்கநிறம் தடவிவிடும் நேரம்..
குஞ்சுப் பறவைக்கு இரைதேடிய
தாயின்
காட்டைத் தாண்டிய பயணம்
கூட்டில் முடியும் நேரம்..
பிஞ்சுக் குழந்தைகள்
பள்ளிப் பையெனும் பாரமிறக்க
வீட்டில் வந்து
விடுதலையாகும் நேரம்..
கண்கள் பேசியதைக்
காரியமாக்கிட,
இரவின் வருகைக்கு
இணைபிரியா
காதல் உலகம்
காத்திருக்கும் நேரம்..
கடவுள் தோட்டத்து
மணிமலரின் வாசம்
ஓசையாய்
வெளிவந்திடும் நேரம்..
இது,
இரவும் பகலும் இணைந்திடும்
மணவிழா-
மாலையாகிய நேரம்…!
படத்துக்கு நன்றி
http://www.hiren.info/desktop-wallpapers/natural-pictures/sunset_kauai_hawaii
அழகான கவிதை வரிகள்…மிகப் பொருத்தமான படம். பகிர்விற்கு மிக்க நன்றி.
பார்வதி இராமச்சந்திரன் அவர்களின்
பாராட்டுக்கு நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…