சு.ரவி

வணக்கம், வாழியநலம்

 

நேற்றைய முழுநிலா வடமாநிலங்களில் புத்த பூர்ணிமாவாகக் குறிக்கப் பட்டுள்ளது.

 

அன்பு, அறம், அஹிம்ஸை, அவா அறுத்தல் என எளிமையும், வலிமையும் நிறைந்த

வழிமுறைகளைப் போதித்த மஹான்!

 

சித்தார்த்தன் புத்தராகப் பரிணாமம் பெற்றது இந்த பாரத மண்ணிலே எனினும், இவர் தூவிய விதைகள்

பரவிச் செழித்ததென்னவோ கிழக்காசிய நாடுகளிலே!

 

(புத்தரையும், இந்துமதம் தனது கடவுளின் அவதாரங்களில் ஒன்றாக உள்வாங்கி விழுங்கிவிட்டதோ!)

 

அமைதிதவழும் புத்தரின் சாந்தமுகம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று!

 

வண்ணப்படமாக இணைப்பில்..

 

பார்க்க, ரசிக்க

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “புத்த பூர்ணிமா

 1. அன்பு ரவி அவர்களுக்கு, இந்த வர்ணம் தீட்டும் முறை அழகாக இருக்கிறது, உங்களின் தனிப்  பாணியாகவும் தெரிகிறது.  இந்த முறையை… வர்ணம் தீட்டிய விதத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கொடுக்க இயலுமா?
  தூரிகையைவிட வண்ணப் பென்சில்கள் உபயோகித்து பிறகு நீரின் உதவியால் வாஷ் டிராயிங்  செய்தது போல இருக்கிறது.  புத்தரின் ஓவியத்தைக் குறிக்க மஞ்சள் வர்ணத்தை தேர்ந்தெடுத்ததும் சிறப்பு.  

  அன்புடன் 
  ….. தேமொழி 

 2. தேமொழி,
   தங்கள் ஊகம் மிகச் சரியானதே! இது நான் வழக்கமாக உபயோகிக்கும் OIL  or POSTER colour work அல்ல. பெரும்பாலும் வண்ண பென்ஸில், மற்றும் நீர்வண்ண பென்ஸில் ( இதனால்வண்ணம் தீட்டிப் பின்னர் தூரிகையில் நீர்தோய்த்து வாஷ் செய்வது), WAX/Plastic Crayons  உபயோகித்து வரைந்தேன்>
  வரையவோ, வண்ணம் தீட்டவோ உந்துதல் ஏற்படும் போது கையில் எது கிடைக்கிறதோ அதே கருவியாகி விடுகிறது.
  அன்புடன், சு.ரவி  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.