ஆயிரமாண்டு பிரஹதீஸ்வரர் ஆலயம்; புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு

0

இந்திய ரிசர்வ் வங்கி, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரஹதீஸ்வரர் ஆலயத்தின் உருவம் பொறித்த புதிய ஐந்து ரூபாய் நாணயத்தை விரைவில் வெளியிட உள்ளது.

இந்த நாணயம் முன்புறம் அசோகத் தூணின் சிங்க முகமும் வலது மேற்புறத்தின் விளிம்பு சுற்றுவட்டத்தில் இந்தியா என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். சிங்கமுகத்தின் கீழ், மதிப்பு இலக்கம் ‘5’ என்பது சர்வதேச எண்ணிலும் இருக்கும். நாணயத்தின் பின்புற முகப்பில் பிரஹதீஸ்வரர் ஆலயம் மற்றும் கை கூப்பிய கரங்களுடன் முதலாம் இராஜராஜ சோழ மன்னரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். 2010ஆம் ஆண்டு எண்ணிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

1906ஆம் வருடத்திய இந்திய நாணயச் சட்டத்தின்படி இந்த நாணயம் செல்லத்தக்கது. ஏற்கெனவே புழக்கத்திலிருக்கும் 5 ரூபாய் நாணயங்களும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.

================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.