இந்த வார வல்லமையாளர்!
இந்த வார வல்லமையாளர் [08/07/2013 – 14/07/2013]
பேரா. நாகராசன்
சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்ற கவிதை வரிக்கேற்ப மடலாடர்கள் மற்றும் படைப்பாளர்கள் தங்கள் சிந்தனை வளங்களைக் கருத்து வடிவில் வல்லமை மின் இதழிலும் மடலாடல் குழுவிலும் வெளியிடுவது நாம் அறிந்ததே
தனித்திருப்பவன் தனியனல்ல ஒருவரின் தனித்தன்மை ஒரு குழுவில் இருக்கும்போதே வெளிப்படும். தனித்தன்மை மிளிரத் தங்களின் ஆற்றல் வெளிப்படும் வண்ணம் தெரிந்தெடுத்த புலத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்துபவர்களே வல்லமையாளர்கள்
நவீன விஞ்ஞானம் நாத்திகம் என்று தமிழ்க் குமுகம் தன்னுடைய நடுநாயகமான ஆன்மீகத்திலிருந்து விலகி வெகுதூரம் பயணிக்கும் ஆபத்தான சூழலில் தமிழகத்தின் சமயச் சிந்தனைகளைத் தொடராகக் கோர்வையுடம் எழுதும் வல்லமை உடையவர் அவர்
சமயக் குரவர்களையும் பாணர்களையும் நினைவில் நிறுத்தும் வண்ணம் பல தலங்களுக்கு நேரில் சென்று அத்தலங்களின் பெருமைபற்றி ஆற்றொழுக்கான எளிய தமிழ் நடையில் எழுதும் வல்லமை படைத்தவர் அவர்
பழமையான ஓலைவடிவிலும் அச்சு ஊடகத்திலும் உள்ள வளங்களில் சிறப்பான சிலவற்றித் தேர்ந்தெடுத்து இணையத்துக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் அவர் அருகிவரும் கருத்து வளங்களை எண்ணிமப்படுத்துவதில் வல்லவர்
ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்ததும் இணையத்தில் தன் பங்குக்கான தினம் ஒரு திவ்ய நாமம் நாள் தவறாமல் எழுதும் வல்லமையுடையவர் நல்லதொரு கருத்தென்றால் தயங்காமல் பாராட்டுவதும் குறையைச் சுட்டும்போது மென்மையான நிலைப்பாட்டையும் எடுத்துப் பிறர் மனம் புண்படாமல் எழுதும் வல்லமையாளர் இணையத்துக்கே இயல்பான கருத்து மோதல் கட்சி சேர்த்தல் பிறரை எள்ளி நகையாடல் போன்ற வல்லமைகள் இல்லாதவர் இணையத் தமிழுக்கு உயர்கல்வியில் உரிய இடம் கிடைக்கவேண்டும் என்ற மாறாப் பற்று கொண்டவர் அவர் திரு.காளைராஜன் அவர்கள் அவரே இந்த வார வல்லமையாளர் அவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த பெருமை அவரே இந்த வார வல்லமையாளர்
வல்லமையாளர் விருது பெற்ற திரு .காளைராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
இந்த வார வல்லமையாளர் திரு.காளைராசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
மனமார்ந்த வாழ்த்தும் வணக்கமும்!!
மதிப்பிற்குரிய திரு.காளைராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
….. தேமொழி
வணக்கம்.
சிறியோரையும் பெரியோரையுமே சிறப்புச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. சிறியோரைப் புகழ்வதால் அவர்களது செயல்பாடுகள் மிளிரும். பெரியோர்களைப் புகழ்வதால் அவர்கள் பூரிப்படைவர். நான் இரண்டுங்கெட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்பிற்கு இனிய பேராசிரியர் அவர்கள் என்னை ஒரு வல்லமையாளன் என்று கூற, தாங்கள் எல்லாம் என்மீது அன்பு கொண்டு என்னை வாழ்த்தியுள்ளீர்கள். தங்களது அனைவரது அன்பிற்கும் வாழ்த்திற்கும் என்றும் கடப்பாடு உடையேன்.
மற்றபடி இதுவரை செய்துள்ளது 🙂
1) திருக்குறளில் புதிய சிந்தனைக் கட்டுரைகள் – 5
2) அறிவியல் ஆன்மிகக் கட்டுரைகள் – 4
3) வெளியிட்டுள்ள நூல்கள் – 3
4) திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளை (தொண்டு)
5) திருப்பூவணம் தல வரலாறு குறுந்தகடு பதிப்பித்து வெளியிட்டது
6) திருப்பூவணம் திருமுறைகள் குறுந்தகடு பதிப்பித்து வெளியிட்டது.
செய்துகொண்டிருக்கும் பணிகள்
1) திருப்பூவணநாதருலா நூல் பதிப்பு
2) திருவாப்புடையார் புராணம் நூல் பதிப்பு
இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளன.
தங்களது அன்பான வாழ்த்துகள் எனது பணியை மேன்படுத்தும்.
தங்கள் அனைவரது அன்பிற்கும் என்றும் நன்றியுடையேன்.
அன்பன்
கி.காளைராசன்
அன்பு காளைராஜன் வல்லமையாளர் என்ற பட்டம் பெற்றதற்கு என் இனிய வாழ்த்துகள்; தங்கள் நற்பணிகள் மேலும் சிறக்க என் நல்லாசிகள், வாழ்த்துகள்