தொலைந்த தோழமை!
பவளசங்கரி திருநாவுக்கரசு
தொலைந்த தோழமை!
துன்பக் கடலில் மூழ்கித் துடிக்கும்
எனைக் காக்க வருவாயா நீ ?
எங்கே இருக்கிறாய் நீ?
என் நம்பிக்கையும் நீ!
தொலைந்த என் நிம்மதியும் நீ.
எங்கே இருக்கிறாய் நீ?
ஒளிவிளக்காய் வழிநடத்து என்னை!
சோர்ந்து போன இதயத்திற்கு இதமாய்
களிம்பிட்டுப் பிணியைப் போக்கும் வழியமைத்து
கையோடு கைசேர்த்துத் தோழமையாயிரு!
மறைந்து வாழும் மனத்தை மாற்று
கனிந்து நாளும் கருணை காட்டு!
மாயமாய் மறைந்து போன எனதருமை புத்தகத் தோழனே!!
படத்திற்கு நன்றி :
புத்தகத்தோழன் என்றுமே உறுதுணை; கொடை வள்ளல்; ஆசான்; பிரதியுபகாரம் கேட்காதவன்; அவனை நாம் தான் தேடவேண்டும்; நம்மை அவன் தேடி வருவதில்லை.