அன்னையினருள்
புவனேஷ்வர்
ஸ்ரீ காமாக்ஷி துணை:
மயங்கிய நிலை:
தீதிது செய்ய நலமிதென் றறியோம்
மோதிடு மதங்கொள் கரிபோல் மதியோம்;
சோதியன் செவ்வடி சிந்தனை செய்யோம்
செய்யா தன செய்வோம்;
உய்யும் வழிசெயல் செய்யோம் மெய்யின்
பொய்யா ரனுபவம் மெய்யாய்க் கொண்டே
செய்யா தனபல செய்துழி வீழ்வோம்
மெய்யா னதுகா ணோம்.
அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்
கண்டங் கருத்தவன் கார்முகில் வண்ணன்
உண்டான் உலகம் உலகே ழானான்
உண்மை யதை யுணரோம்;
உய்த நிலை:
போற்றியெனப் பணிந்துவிட் டோமெம் மம்மை
பொன்னடிக்குப்பல் லாயிரம் போற்றி காண்;
தாயெனக் கொண்டுவிட் டோம் – பெற்ற
சேய்பண்ணும் சேட்டைகள் தாய்பொறுப் பாள்!
உய்வித் தெமைக் காப்பாள்கா ணன்னை
கொய்மலர் வண்டார் குழலிகா மாக்ஷி;
வேறென்ற நிலை களைவா ளொருமாயத்
திரை கிழித்தேகிடக் கரந் தருவாள் .
படத்துக்கு நன்றி: http://blaufraustein.wordpress.com/2012/09/16/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/
மயங்கிய நிலையும் உய்த நிலையும் படிக்கப் படிக்க ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.
////தாயெனக் கொண்டுவிட் டோம் – பெற்ற
சேய்பண்ணும் சேட்டைகள் தாய்பொறுப் பாள்!////
உத்தமமான பக்தனொருவனே இவ்விதம் அறுதியிட்டுக் கூற முடியும். பகிர்விற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் சகோதரரே!
அருமை!
அண்டங்களின் இயக்கமவள் அணுவிலும் நுணுக்கமவள்
அன்பெனும் கடலவள் அழகுச்சுடரவள் !
அன்னை காமாட்சி அனைவருக்கும் அருளட்டும்.
அழகான வரிகள். மயங்கிய நிலையையும் உய்த நிலையையும் அடுத்தடுத்துக் காட்டி மனதின் இருவேறு நிலைகளை அழகாகப் படம் பிடித்துக் கட்டி இருக்கிறீர்கள்.
பெருமதிப்பிற்குரிய சகோதரி பார்வதி இராமச்சந்திரன் அவர்களே,
தங்கள் நெகிழ்ச்சியான பின்னூட்டத்துக்கு அடியேன் தலை வணங்குகிறேன்.
பணிவன்புடன்,
புவனேஷ்வர்
தங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கு அடியேனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள், அண்ணா……..
பணிவன்புடன்,
புவனேஷ்வர்
@ஆலாசியம்
தங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கு அடியேனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள், அண்ணா……..
பணிவன்புடன்,
புவனேஷ்வர்
@சச்சிதானந்தம்:
தங்கள் மேலான பாராட்டுக்களுக்கும், ஊக்க மொழிகளுக்கும் அடியேனது சிரம் தாழ்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன், ஐயா.
பணிவன்புடன்,
புவனேஷ்வர்