தமிழ்த்தேனீ

 

இறைவனவன் தன்வேலை அதிகமான காரணத்தால்
உரத்துக் குரல் கொடுத்து ஓங்கியே ஒலிக்கும்
மனசாட்சி யெனும் ஒரு தானியங்கிக் கருவியை
உண்மைக்கு சாதகமாய் தன்சார்பாய் தன்மறுபதிப்பாய்

நம்முள்ளே புதைத்து வைத்தான் உள்ளத்தில்
பொதிந்து வைத்தான் அறுகிவிட்ட நேர்மைதனை
மீட்டெடுக்க ஒரு கருவி காலம் தவறாமல்
நேர்மை தவறாமல் தானாய் இயங்கும் கருவி

உரத்த சிந்தனையாய் உண்மையின் பெட்டகமாய்
தானியங்கிக் கருவியதை உயிர்தரும் போதினிலே
உடலுடனே ஒட்டி வைத்து அனுப்பி வைத்தான்
நம்முள்ளே ஒளித்து வைத்தான் நாமே அறியாமல்

ஓராயிரம் சிந்தனை நம்உள்ளத்தில் விளைந்தாலும்
சுயநலமாய் சிந்தித்தே உண்மைதனை நாம் ஒதுக்கிக்
உறுத்துகின்ற போதிலெல்லாம் உரத்த சிந்தனையை
ஒதுக்கி வைத்தே வாழுகின்றோம் வாய்மை மறந்து

ஒளித்துக் கூறாது உரத்துக் குரல் கொடுக்க
ஒளித்து வைத்தே நாமும்தான் நாடகமாடுகிறோம்
உலகினையே உள்வாங்கும் கடல் போல
உண்மைகளை உள்வாங்கும் திடல் போல

உண்மைக்குப் புறம்பாய் வேறெதையோ தேடுகின்றோம்
மனம் மறைக்கும் கபடவேடம் தரித்தே நிற்கின்றோம்
உரத்த சிந்தனையாய் மாறுகின்ற ஒவ்வொன்றும்
உயர்த்திப் பிடிக்கும் நம்மை ஓங்கி வளர்க்கும்

உழைப்பெனும் உரமிட்டு உண்மையெனும் நீரூற்ற
தழைக்கின்ற வயல்தனிலே ஓங்கிவளர் நெற்பயிர்போல
கடவுளின் தூதுவனாம் தானியங்கிக் கருவியதாம் உரத்த
சிந்தனைய மனிதநேய உரமிட்டு மனசாட்சி நீறூற்றி
வளர்த்திடுவோம் மானுடமும் வளர்ந்திடவே!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““உரத்த சிந்தனை”

 1. மனசாட்சி யெனும் தானியியங்கி கருவி!

  மனதிற்கு சாட்சியான இக்கருவி 
  தானாக இயங்கும்; அப்போது 
  மனம் மட்டும் தூங்கினால் 
  மகத்தான யாவையும் விளையும் 

  இந்த மகத்துவம் மகாத்மாக்களுக்கு 
  மாத்திரமே கூடும் காரணம் 
  அந்த தானியங்கும் கருவிதானே 
  உண்மையின் சொரூபமான மனித ஆத்மா..

  -என்று அழகாய் தத்துவார்த்தமாயும்
  அதே நேரம் மனதின் மாசு தான் எத்தனை 
  கொடுமையை கூசாமல் செய்கிறது 
  என்பதையும் முன் வைக்கும் வசனக் கவிதை…

  அற்புதம்! அருமை! ரசித்தேன் நன்றிகள் ஐயா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *