Featuredஇலக்கியம்கட்டுரைகள்

அறிவியல் நாயகன்

ஆவுடை நாயகம்

ganeshpicture5சமயம் என்பதற்கும் மதம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. மதம் என்பது தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது அதனால் தான் அதை மெய்யியல்/தத்துவயியல் என்போம். சமயம் என்பது தத்துவயியல் கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டது. உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கலாம் ஆனால் சமயம் ஒன்றுதான் அதுவும் அது இந்து மதம் மட்டும்தான். அப்படிப்பட்ட இந்து மதத்தின் முழுமுதற் கடவுள் ஆனைமுகன். உலக வரலாற்றில் அறுவை சிகிச்சை முறைக்கு அறிவு வழங்கியது அவன் பிறப்பு. உலகம் மிகப் பெரியது என்று எடுத்துச் சொன்னவன் முருகன் இல்லை அவன் தம்பி. உலகம் உள்ள கையில் என்று இன்றைய விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கு (மடிகணினி ,இணையதள மொபைல்) அன்றே வழிகாட்டியவன் விநாயகன். பெற்றவளையும், தந்தையையும் வணங்கு என்று பகுத்து அறிவு வழங்கிய பாலகன். இயற்கையால் உருவான அனைத்தும் அனைவர்க்கும் பொதுவானது என்று கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை கவிழ்த்து கம்யூனிசம் சொன்ன கவிநாயகன் எங்கள் சிவமைந்தன் அல்லவா ? மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்து பலர் முகவரி சொல்லும் மூத்தவன் அவன் அல்லவா ? கூரை தேவை இல்லை கோபுரம் தேவை இல்லை விநாயகர் சிலை இருந்தால் போதும் வீதிக்கு ஒரு விருட்சம் உண்டு. எளிமையாக இருப்பவன் எழுந்து வந்தால் விசுவரூபம் எடுப்பவன். குழந்தையில்லாத பிரச்சனைக்கு குளக்கரையில் குளித்து அரச மரம் சுத்தினால் ஆணுக்கு விந்தணுவும் வீரியமும் பெண்ணுக்கு கர்பப்பை கோளாறும் நேராகும் என்கிறது நாட்டு வைத்தியம். குலம் தழைக்க குளத்தாங்கரை அருகில் இருந்தவன் எங்கள் தேவியின் தெய்வமகன். குழந்தைகளைப் பார்த்து பிள்ளையாரைச் சுத்தி வா என்ற முதுமொழி போய் ஊரை சுத்திவா என்று ஊதாரியை வளர்க்கும் அம்மை அப்பன்களுக்கு இது பொருந்தாது. தலையில் கொட்டி தோப்புக்கரணமும் போடுவது கேலியாகப் பார்த்தவர்களுக்கு இப்போது ஜெர்மன் நாட்டில் இது ஒரு அறிவு பயற்சிக்காக என்று பணம் வாங்கி வகுப்புகள் நடத்தும் போது வலிக்கிறது. எதையுமே இழந்த பிறகு விழிக்கும் விழிகளுக்கு என்ன எழுதி என்ன பயன்? பகுத்து அறிவு என்பது பிறர் மனதை புண்படுத்தக் கூடாது என்பது. ஆனால் வழக்கம் போல விடுமுறை தினக் கொண்டாட்டம் என்று தொலைக்காட்சிப் பெட்டி தொல்லை கொடுத்தாலும் சகிப்புத்தன்மை என்ற சோம்பேறித்தனத்தோடு வீட்டில் கொழுக்கட்டை உண்டு கழியுங்கள்.பிற மதங்களைப் போல வன்முறையை கையாளச் சொல்லவில்லை. ஜனநாயகம் ,கருத்துச் சுதந்திரம் என்று சொல்லும் அவர்களின் கைகளை நீதியின் துணை கொண்டு கட்டி இருக்கலாம். இல்லை விளம்பரம் கிடையாது என்று பொருளாதார நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். எதுவும் செய்யாமல் எல்லாம் அவன் செயல் என்பது முயற்சி இல்லாமை என்பதைக் காட்டுகிறது. விநாயகர் சதுர்த்தியில் புதிய விழிப்புணர்வு பிறக்கட்டும்.

படத்திற்கு நன்றி :

http://www.google.co.in/imgres?imgurl=http://isexiiindia.files.wordpress.com/2010/10/ganeshpicture5.jpg&imgrefurl=http://isexiiindia.wordpress.com/2010/10/01/lord-vinayagar-tamil-first-god-prayer/&h=361&w=360&sz=12&tbnid=E4PiRvteA-cIfM:&tbnh=87&tbnw=87&zoom=1&usg=__K6csU5olg6__OjsMozPzH5nkorE=&docid=7YUWP3bCrqEi2M&sa=X&ei=2AIqUtv1KoWakAXaq4HIAg&ved=0CDAQ9QEwAQ&dur=119

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  சமயம் இப்படி வந்ததோ!

  காலையிலே எழுந்திரு அது சமயம் இதையும் செய்.
  காலைக் கடன்களை முடித்து கடவுளை வணங்கிடு அது சமயம் இவைகளைச் செய்..
  உண்டு உழைத்து, இன்புற்று உறங்கி மீண்டும் எழுந்திடு அது சமயம் இவைகளைச் செய் என்று அனைத்தையும் இறைவனுக்குச் செய்வதாக கூறி நமக்கு நாமே நல்லது செய்ய கூறிய அனைத்திற்கும் ஒரு ஆன்மீகம் சார்ந்த அறிவியல் காரணம் இருக்கிறது அதை அந்தந்த சமயம் அவ்வப்போது செய் என்று கூறுமிந்த சமயம் தான் எந்தனை அருமை என்பதை இந்த சமயம் தங்களின் கட்டுரை வழியாக அறிந்தச் சமயம் இன்புற்று யான் எழுதியை வாசிக்கும் அனைவரும் இச்சமயம் என்னைப் போலே உணர்வாரே! 🙂

  என் முப்பாட்டன் செய்தான், என் தாத்தன் செய்தான், என் அப்பா செய்தார், நானும் செய்கிறேன், எனது பிள்ளையும் செய்கிறான் அவன் பிள்ளைக்கும் சொல்லித் தருகிறோம்…

  அச் சமயங்களில் இவைகளை பெரிதாக பகுத்தறிய அவசியமில்லை…. இதைச் செய்தவர்கள் யாவரும் சிறப்புடன் வாழ்ந்தார்கள்… அதனால் நாங்களும் வாழ்வோம் என்றே நம்புகிறோம்!

  சில விசயங்களை இப்படித் தான் செய்ய வேண்டும் அதனால் வேறொரு தீய பாதிப்பு யாரிடத்திலும் விளையவில்லை என்றால் அச் சமயம் அப்படிச் செய்வதே சரி… 

  இதில் பகுத்தறிவு!!!…. ஆம், பகுத்தறிந்ததால் தான் அருமையான தகவல்கள் குவிந்தக் கட்டுரை வந்தது!

  பகிர்விற்கு நன்றி! 🙂

 2. Avatar

  //இயற்கையால் உருவான அனைத்தும் அனைவர்க்கும் பொதுவானது என்று கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை கவிழ்த்து கம்யூனிசம் சொன்ன கவிநாயகன்//

  இது என்னை மிகவும் கவர்ந்த வரிகள். சமத்திற்குள் மறைந்திருக்கும் அரசியலை மேலோட்டமாகத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள்.

  நன்றி!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க