இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
இந்த வார செய்தி முழுவதும் விக்கிபீடியா – தமிழ் பற்றியதுதான். பயனுள்ள கட்டற்ற கலைக் களஞ்சியமாக வளர்ந்து வரும் தமிழ் விக்கிப்பீடியா, பலருக்கும் அடிப்படை அறிவை ஊட்டுகின்ற பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றது.
இருந்தாலும் இன்று நம் தாய்மொழியாம் தங்கத் தமிழில் ஏறத்தாழ 55000 கட்டுரைகள் படைக்கப்பட்டுள்ளன என்பதும் சுமார் 900 படைப்பாளிகள் இதற்கு பங்களிக்கிறார்கள் என்பதும் நாம் பெருமைப்படவேண்டிய விஷயம்தான். ஆங்கிலத்துக்கு நிகராக நம் தமிழைக் கொண்டு செல்ல நாம் அதிகம் உழைக்கவேண்டும் என்ற உண்மையை உணர்ந்தாலும் அந்தப் பயணத்திலே நாம் முன்னேறி வருகிறோம் என்ற விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இப்படி நினைக்கையில்தான் சமீபத்தில் ஹிந்து நாளிதழில் தமிழ் விக்கிபீடியாவில் பத்தாம் ஆண்டு நிகழ்வைப் பற்றிய ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியில்
http://www.thehindu.com/sci-tech/technology/internet/tamil-wikipedia-to-celebrate-10-years/article5176688.ece?homepage=true
ஒரு இடத்தில் 77 வயது செங்கை பொதுவன் என்பார் 2580 கட்டுரைகள் விக்கி தமிழில் எழுதியிருப்பதாகவும் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் தமிழ் விக்கியில் இடம்பெற முயற்சிப்பதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த 77 வயது செங்கை பொதுவன் அவர்களது தமிழ்ச் சேவை பாராட்டுக்குரியது.. அவர் முயற்சி மென்மேலும் பெருகவேண்டும் என்பது எம் அவா. இந்த முகமறியா விக்கி முகவர்தான் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.
கடைசி பாரா: திரு சு. ரவியின் கைவண்ணத்து ஓவியமும் பாடலும்:
தங்கச் சூரியன் தகதக வென்று
கீழை வானில் கிளர்ந்து எழுந்தது!
வேத மதத்தை மூடியிருந்த
தூசினை எல்லாம் துலக்கி அழித்து
இந்த மதத்துக் கீடிலை என்றது.
சோம்பிக் கிடந்த இந்திய இளைஞரைத்
தட்டி எழுப்பித் தன்னிலை உணர்த்தி
“எழுமின், விழிமின், இலக்கினை முயன்று
தொடுமின்” என்று தோள்தட்டிச் சொன்னது!
படம் உதவி: விக்கிமீடியா – https://ta.wikipedia.org/s/weg
வல்லமையாளர் செங்கை பொதுவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், சிறப்பு பதிவர் ரவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அத்துடன் பத்தாண்டு காலம் நிறைவு செய்த விக்கிபீடியாவையும் வல்லமையோடு சேர்ந்து வாழ்த்துகிறேன்.
தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அனைத்து செய்திகளையும் விக்கிபீடியா வில் இடம்பெறச் செய்யும் மாபெரும் தமிழ்ச்சேவை செய்யும் இந்தவார வல்லமையாளர் திரு.செங்கை பொதுவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்.
சுவாமி விவேகானந்தரைப் பற்றிய அழகிய கவிதையையும் ஓவியத்தையும் வழங்கிய திரு.சு.ரவி அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
செங்கை பொதுவன் அவர்கள் தமிழுக்கு பொதுவன். அவருக்கும், ரவிக்கும் பாராட்டுகள்.