அந்த உண்மை…
செண்பக ஜெகதீசன்
கிளையதிலே இலையை வைத்து
இலையிலே பச்சை வைத்து
இயற்கைக்கு அழகு வைத்து
இதையே பழுக்க வைத்து
இடம்பெயர்ந்து விழவே வைத்து
சுடுமணலில் காயவைத்து
சருகெனவே ஆகவைத்து
தெருத்தெருவாய்ப் பறக்க வைத்து
பனிமழையில் நனைய வைத்து
உரமாக மக்கவைத்து,
மரம்வளர ஊக்குவிக்கும்
உண்மைதான்-
இறைவன்…!
படத்திற்கு நன்றி: http://www.gameinformer.com/blogs/members/b/rfxrage_blog/archive/2013/06/12/my-top-10-favorite-skill-tree-characters.aspx
அளப்பறிய சக்தி கொண்டவன் ஆண்டவன். அவனை அவனியில் அவரவர் ஒரு பெயரில் சொந்தம் கொண்டாடினாலும் , அனைவருக்கும் பொதுவாகவே, அனைவருக்கும் பயனாகவே அவன் தன்னை பிரதிபலிக்கிறான், இந்த மரத்தைப்போல. ஒருவனுக்கு மரமாகவும், ஒருவருக்கு கிளையாகவும், ஒருவருக்கு இலையாகவும் , ஒருவருக்கு சருகாகவும் அவனை தேடுவோருக்கு தென்பட்டு உண்மையில் இருக்கிறான் இந்த மரத்தைப்போல..
அருமை! அருமை! வழக்கமாகத் தாங்கள் எழுதும் நடையிலிருந்து சற்று மாறுபட்டு புது நடையில் அழகாக எழுதி இருக்கிறீர்கள். முதல் வார்த்தையில் இருந்து கடைசி வார்த்தை வரை கவிதை தங்குதடை இன்றி, சரளமான சொல்லாட்சியுடன் செல்கிறது.
இறைவனைப் பற்றிய இந்த எளிய உண்மையை உணர வைக்கும் கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.
திருவாளர்கள் தனுசு, சச்சிதானந்தம் ஆகியோரின்
விரிவான கருத்துரை மற்றும்
வாழ்த்துரைகளுக்கு மிக்க நன்றி…!