இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
‘பாரதநாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’ என்று பாரதி எழுதியது எதற்காக என்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பாரதநாட்டை சுமார் இருநூறு வருடம் சுல்தான்கள், இருநூறு வருடம் மொகலாயர்கள், பின்னர் வந்த ஐரோப்பியர், பிரிட்டிஷ்காரர்கள் முன்னூறு வருடங்கள் ஆண்டனர். ஔரங்கசீப் காலத்தில் முக்கால்வாசி பாரதம் மொகலாயர் கைக்குப் போனது என்றால் இங்கிலீஷ்காரர்கள் கையில் அகண்டபாரதம் முழுவதுமே சென்றுவிட்டது. ஆட்சியாளர் அனைவருமே பாரத பண்பாட்டை முற்றிலும் நிராகரித்தவர் (ஒரு அக்பர் தவிர) என்று கூடச் சொல்லலாம். இத்தனை பரதேசத்தவர் ஆண்டாலும் உள்ளூற நிரவிக்கிடந்த பாரதத்தின் ஆன்மீக நம்பிக்கையையோ பண்பாட்டு விதானங்களையோ இவர்களால் மாற்றமுடியவில்லைதான்.
பாரத ஆன்மீகப் பண்பாடு, கலாசாரங்கள் இவையாவும் தர்மத்தின் அடிப்படையில் ஏற்பட்டவை. ஆரம்பத்திலிருந்தே அதர்மத்தைக் கண்டு அஞ்சுபவர்களாக நம் முன்னோர்களை சித்தரித்திருந்தார்கள். அதர்மம் துளிர்த்து வன்முறையாட்டம் ஆடும்போதெல்லாம் தெய்வம் தோன்றி அந்த அதர்மத்தை அழித்தது என்பதை பரிபூர்ணமாக நம்புபவர்கள். அப்படி அதர்மத்தை அழிக்கும் தெய்வங்களுக்கு நன்றி பாராட்டி விழா எடுத்து மகிழ்பவர்கள். வேலனுக்கும் துர்க்கைக்கும் திருமாலுக்கும் கண்ணனுக்கும் ராமனுக்கும் என்றில்லாமல் தம் ஊர்மக்கள் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்து தெய்வமாகிவிட்டவர்களுக்கும் அவர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் விழா கொண்டாடி வருபவர்கள். இதை நம் பாரதம் முழுமைக்கும் வெவ்வேறு விதமாக காணலாம்.
ஆனாலும் அங்கே குறிக்கோள் ஒன்றே.. ‘தர்மம் வெல்லவேண்டும் – அதர்மம் அழியவேண்டும், ஊர் செழிக்கவேண்டும், நல்லதோர் சமுதாயம் உருவாகவேண்டும்.. இதுதான் குறிக்கோள். இந்த குறிக்கோள் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் விதமாக அமையவேண்டும் என்பதற்காக அதற்கான புராணக் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அக்கருத்துகள் பொதுவாக மெய்ஞ்ஞானமாகவே இருந்தாலும் அது விஞ்ஞானத்தோடு பொருந்தும் வகையிலும் இருந்தது. இந்த புராணக்கருத்துகள் நாளடைவில் பாமரருக்கு எளிதாகப் புரியவைக்கும்படியாக புராணக்கதைகளாக மாறின. இக் கதைகளை மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து எல்லோரும் சேர்ந்து பண்டிகையாகக் கொண்டாடினர். அப்படிப்பட்ட ஒரு பண்டிகையைப் பற்றிய பதிவு ஒன்றினைப் பற்றியதுதான் இந்த வார வல்லமையாளர் எழுதியது.
சரதபௌர்ணிமை என அழைக்கப்படும் ஐப்பசி மாத முழுநிலவு நாளன்று கொண்டாடப்படும் கஜகிரி லக்ஷ்மி பூஜையைப் பற்றிய பதிவாகும். இந்த பூஜைக்கான ஆதி காரணங்கள், விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்டதாக எப்படி அமைகிறது, பாரதத்தின் எந்தந்தப் பகுதியில் கொண்டாடப்படுகிறது, விரதம், அதன் பலன்கள் போன்றவைகளை விவரமாகக் கொடுத்துள்ளார் பதிவர் திருமதி பார்வதி ராமச்சந்திரன்.
நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் உருவான இவை போன்ற விரதகால பூஜைகள் பண்டைய காலத்திலிருந்தே மக்கள் அனுசரித்து வந்திருக்கின்றனர் என்பதனை விவரமாக தெரிவித்திருக்கிறார்.
புராணக் கதை எதுவானால் என்ன, அதனால் தீங்கு நெருங்காத அளவுக்கும் மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவும், அவர்களின் மன வளமும், செல்வ வளமும் பெருகும் விதமாகவும் அமைந்தால் சமுதாயம் வளரும் இல்லையா.. வளரும் சமுதாயம் நல்ல சமுதாயமாகவும் தர்மம் குன்றாத சமுதாயமாகவும் இருந்துவிட்டால் உலகில் ஏது பிரச்னை.. இப்படியெல்லாம் நம் மனதில் கேள்வி எழும்பும் அளவுக்கு சிந்தனைகள் உருவாக்கிய திருமதி பார்வதி ராமச்சந்திரனை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் பிரத்தியேக வாழ்த்துகள்.
கடைசி பாரா: கவியரசைப் பற்றிய சக்திதாசன் கவிதை
பூஜ்ஜியத்துக்குள் ஒரு ராஜ்ஜியத்தை
பூட்டி வைத்த பரம் பொருளின்
தத்துவத்தை எளிமையாக்கி எமக்கதை
தீந்தமிழ்ப் பாடலாக்கிய கவிவேந்தனே!
இவ்வார வல்லமையாளர் பார்வதிக்கும்,கடைசிப் பத்திச் சிறப்பாளரான திரு சக்திதாசன் அவர்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வணக்கம். தாங்கள் அளித்த இந்த மிகப் பெரிய கௌரவத்திற்கு மனமார்ந்த நன்றி. முன்பே வல்லமையாளர் விருதினை வென்றுள்ளவர்களோடு ஒப்பிடும்போது நான் இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன். இந்த விருது எதிர்பாராதது என்பதோடு, என் ஆன்மீக கட்டுரைக்கு கிடைத்திருப்பது மிகுந்த மன அமைதியைத் தருவதாக இருக்கிறது..அம்பிகையின் பெருங்கருணைக்கும், இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த திரு திவாகர் அவர்களுக்கும், தங்களுக்கும், வல்லமை மின்னிதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி..
இது தரும் கௌரவம் அளப்பரியது. இது மேன்மேலும் பொறுப்புணர்வை அதிகப்படுத்துகிறது. இதற்கு உரியவளாக என்னை தகுதிப்படுத்த மேன்மேலும் முயல்வேன்.
திருமிகு.சக்திதாசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக் கூறிய திருமதி.தேமொழி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
இவ்வார வல்லமையாளர் அன்புத் தோழி பார்வதிக்கும், கவியரசரின் நினைவலைகளை நெஞ்சில் எழுப்பிக் கடைசிப் பாராவில் இடம்பெற்றுள்ள கவிஞர் சக்திதாசன் அவர்களுக்கும் உளம்நிறைந்த பாராட்டுக்கள்!
வல்லமையாள்ர் பார்வதி ராமசந்திரன் அவர்களுக்கும், சிறப்பு பதிவர் சக்திதாசன் அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டதற்கும் மொகலாயர்கள் ஆண்டதற்கும் நிறைய்ய வித்தியாசங்கள். மொகலாயர்கள் இந்தியாவை ஆண்டபோது அவர்கள் இங்கிருந்து எதையும் எடுத்துக்கொண்டு போகவில்லை மாறாக அவர்கள் நம் நாட்டை வளப்படுத்தி தலை நகரங்கள் அமைத்து இங்கேயே தங்கி இங்கேயே திருமனம் செய்து ஆட்சி பரிபாலத்தோடு பிள்ளை குட்டி என இருந்தார்கள். அவர்கள் கட்டிய பல கோட்டைகள், அரன்மனைகள் டெல்லி, மற்றும் வட இந்தியா, பெங்களூர் என்று பல இடங்களிலும் இன்றும் நம் அரசு அலுவலகமாக இருக்கின்றன.
ஆனால் ஆங்கிலேயர்கள் வந்து சுறண்டிக்கொண்டு தான் போனார்கள்.
மதிப்பிற்குரிய பார்வதி அவர்களுக்கு, எங்கே உங்களின் கதைகள் , கவிதைகள் .வெகு நாளாக கானவில்லையே.
வாழ்த்துத் தெரிவித்த அன்புச் சகோதரி மேகலா அவர்களுக்கும், சகோதரர் திரு.தனுசு அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
///மதிப்பிற்குரிய பார்வதி அவர்களுக்கு, எங்கே உங்களின் கதைகள் , கவிதைகள் .வெகு நாளாக கானவில்லையே.///
தங்களது அன்பு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. சில தனிப்பட்ட காரணங்கள்.. இறையருளால் விரைவில் மீண்டு(ம்) வருவேன். மிக்க நன்றி!!
வல்லமையாளர் விருது பெறும்
நல் தமிழுக்கு வாழ்த்துக்கள்
நிலை உயர்ந்து நிற்கும் அவர் திறன் கண்டு
தலை வணங்கி மகிழ்றோம்
விருது பெற்ற பார்வதி அம்மையார் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
வல்லமையாளர் விருதால் பாராட்டப் பெற்ற சகோதரி திருமதி பார்வதி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! கடைசி பத்தியில் கதிரொளி வீசும் கவின்மிகு வரிகளால் பாராட்டைப்பெரும் கவிஞர் சக்தியின் தாசனர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
////வல்லமையாளர் விருது பெறும்
நல் தமிழுக்கு வாழ்த்துக்கள்///
தங்களது வாழ்த்துக்களுக்கு என் பணிவான நன்றி!!!
/////SP.VR.சுப்பையா wrote on 27 October, 2013, 17:01
விருது பெற்ற பார்வதி அம்மையார் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!////
வணக்கம் ஐயா!.. தங்களது மாணவி நான்.. என் எழுத்துக்களுக்கு முதன் முதலாக ஒரு தளம் தந்து, அதைச் செம்மைப்படுத்தியவர் தாங்கள். தங்களது பரிபூரணமான நல்லாசிகளே என் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருக்கிறது.
தங்கள் வாழ்த்துக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!!!..
/////Alasiam G wrote on 28 October, 2013, 7:37
வல்லமையாளர் விருதால் பாராட்டப் பெற்ற சகோதரி திருமதி பார்வதி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! /////
தங்களது வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா!!
வல்லமையாளர் விருதினைக் கௌரவிக்கும் சகோதரி பார்வதி அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கடைசிப் பாராவில் இடம் பெற்ற சக்திதாசன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
…..புவனேஷ்வர்
வல்லமையாளர் திருமதி.பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.