விசாலம்

அந்தக்கால கொலுவுக்கும் இந்தக்கால கொலுவுக்கும் நிறைய வித்தியாசங்களை நான் பார்க்கிறேன் அந்தக்காலத்தில் கொலு படிகள் மூளையை உபயோகித்து அமைக்கப்பட்டன. இந்தக்காலத்தில் கொலு வைக்க ரெடிமேடாக எல்லா அளவுகளிலும் படிகள் வாங்கமுடியும் .இதை கொலு ஆனப்பின் புத்தக அலமாரிப்போல் உபயோகித்தும் கொள்ளலாம் அந்தக்கால கொலுவில் அதிக சிரத்தை ,பக்தி இருந்தது.இந்தக்காலத்தில் பக்தியை விட புகழுக்கு ஆசை, தற்பெருமை போன்றவை முக்கியத்துவம் பெருகிறது இதற்கு விதிவிலக்கு இருக்கலாம் .அந்தக்காலத்தில் கல்லுரல் ,அம்மி குழவி தவிர பிரசாதம் செய்ய வேறு உதவியில்லை.இக்காலத்திலேயோ பலவிதமான் மிக்ஸி ,அல்லது ரெடிமேட் மாவு ,விற்கப்பட்டு வேலைபளுவை மிகவும் குறைக்கிறது, அந்தக்காலத்தில் கொலு மூலம் பல உறவினர்கள் கூடும் வாய்ப்பும் தினமும் மஞ்சள் குங்குமம் கொடுக்கும் பாக்கியமும் வீட்டுத்தலைவிக்கு கிடைத்தது.உறவினர்களின் இணைப்பால் குடும்பம் மேலும் வலிமை பெற்றது ,இதனால் வளரும் சிறுமிகளுக்கும் நம் கலாச்சாரம் தெரிய வந்து அதில் அவர்கள் ஈடுபட்டு கலாசாரமும் வளர்ந்தது. இப்போதோ பத்து நாட்களில் தமக்கு சௌகரியமான நாளை தேர்ந்தெடுத்து அன்று மட்டும் மஞ்சள் குங்குமம் கொடுக்க அநதப்பெண்மணியின் பங்கு முடிந்து விடுகிறது .இதனால் வருங்கால சந்ததிக்கு மாமா பெண் ,அத்தை பெண் குடும்பம் கூட தூரமாகி போய் விட்டது .அந்தக்காலத்தில் ஆபீஸ் போகும் பிரச்சனை மிகக்குறைவு .ஆனால் இந்தக்காலத்தில் ஒவ்வொரு நபரும் வெளியில் உத்தியோகம் பார்க்கின்றனர் .இதனால் இது போல் பத்து நாட்கள் பண்டிகை ஒரு பாரமாக அமைந்து ஏனோதானோவென்று அநத் திருநாள் முடிக்கப்படுகின்றது. உடலிலும் உள்ளத்திலும் ஒரு சலிப்பு தட்டுகிறது .தவிர அந்தக்காலத்தில் பணம் குறைவாக இருந்தாலும் மனநிறைவு அதிகமாக இருந்தது . இந்தக்காலத்தில் எத்தனை சம்பாதித்தாலும் போதவில்லை. ஏனென்றால் நிறைந்த மனம் இல்லாமல் பேராசை அதிக பங்கு வகிக்கிறது .இதனாலே பூக்காரி கூட இது போன்ற நாட்களில் மல்லிகை முழம் முப்பது ரூபாய் என்று விற்கின்றனர் அந்தக்காலத்தில் பண்டிகைகேற்ப உடையைக்காண ஒரு தெய்வீக உணர்வு ஏற்பட்டது .இந்தக்காலத்தில் சிலரைப்பார்க்க ஒரு பேஷன் பரேட் பார்க்கும் பிரமை ஏற்படுகிறது .சிலர் தன் தோற்றத்திற்கு பொருந்துகிறதா என்று கூட பார்க்காமல் தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள்.சரி இப்போது 2015ல் கொலுவைப்பற்றிய ஒரு கற்பனை

காட்சி ஒன்று

மூன்று தலைமுறை கொண்ட ஒரு குடும்பம்.பாட்டி ராஜம்மா ,மருமகள் ராஜி , பேத்தி லலிதா .கொலு சமீபிக்கும் நேரம் ,பாட்டிரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிறார். பின் தன் பேத்தியை அழைக்கிறார்.

“ஏண்டி லல்லி கொலு வரதே. இந்த வருஷம் என்ன புதுசா வைக்கப்போறே? தலைவிரிக்கோலமாய் லல்லி வருகிறாள் ஒரு திராட்சைக்குலை காதில் தொங்கியபடி தோளை இடிக்கிறது .

“பாட்டி நான் இந்தக்கொலுவுக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன் .கொலு கான்ட்ரேக்ட் பிசினஸ்.”
“அதென்னடி கொலு கான்ட்ரேக்ட் ?’

“அதுவா .வந்து ….அது சஸ்பென்ஸ் பாட்டி கொலுக்கு முதல் நாள் நான் உனக்கு சொல்றேன்.இப்ப வெளிலே எனக்கு நிறைய வேலை இருக்கு. பை பாட்டி, பை அம்மா “

பாட்டி தன் மருமகளை அழைக்கிறார் . ” ஏண்டி ராஜி என்ன சும்மாவே இருக்கே ! இன்னும் பொம்மை எடுக்கலை .இன்னும் படி கட்டலை . இந்த வருஷம் என்ன பண்றதா உத்தேசம் .லல்லி என்னவோ பிசினஸ் ன்னு சொல்லிட்டு போறா. என்னமோம்மா.இந்தக்கால பொண்களை என்ன சொல்றது?’ “அம்மா நான் என்ன செய்யட்டும்? உங்க பேத்தி ஏதோ கொலு பிசினஸ் செய்யறாளாம் அதோட பேரு முத்தேவி என்டர்பிரைஸ். .என்னை கவலப்படாம இருக்க சொல்றா.”
காட்சி இரண்டு .

கொலுவுக்கு முதல் நாள்.வாசலில் பெல் அடிக்க .கதைவைத் திறந்தாள் பாட்டி . இரண்டு பேர்கள் டை கட்டியபடி ஜோராக நின்று வணக்கம் செலுத்தினர் “பெரியம்மா இதுதானே முப்பதாம் நம்பர் வீடு?”
“ஆமாம் .நீங்கள்ளாம் யாரு ?”

“நாங்க முத்தேவி கம்பெனிலேந்து வந்திருக்கோம்.’

“அதுக்கு இங்க ஏன் வந்திருக்கேள்?

“உங்க வீட்ல கொலு வைக்கணும் ஆர்டர் வந்திருக்கு . பெரியம்மா , எங்க கொலு வைக்கணும் ?எத்தனை படிகள் வைக்கணும்?

பாட்டி வழக்கமாய் வைக்கும் இடத்தைக்காட்ட அவர்களும் அந்த இடத்தை மேற்பார்வையிட்டார்கள் “பெரியம்மா இந்த இடத்தில் ஐந்து படிகள் கட்டினால் கதவு திறக்க இடஞ்சலாக இருக்கும் . அந்தக்கார்னர்லேந்து வச்சாக்க இடமும் இருக்கும் .போக வர வழியும் இருக்கும்.ஒரு ஐந்து நிமிஷத்ல நாங்க வறோம் ” என்றபடி வெளியே சென்று பின் அழகான ஹின்டேலியம் படிகளுடன் வந்தனர் .மளமளவென்று படிகளைப் பொருத்தினர் .மேலே அழகான நம் கொடி போன்று மூன்று கலர் கொண்ட ஒரு துணியை விரித்தனர் . பின் பாட்டியைப்பார்த்தனர் . “பெரியம்மா ,கொலுவில் எந்த மாதிரி பொம்மை வேணும், சொல்லுங்க, சிவன் பார்வதியா. அனந்த சயனமா, தேச தலைவர்களா .,காந்தியா நேருவா……..அப்பறம் விவேகானந்தர் . ராகவேந்திரர் ன்னு நிறைய இருக்கு ” “எல்லாம் கலந்து இருக்கட்டும் .தம்பி “. “சரிங்க” . என்று சொன்னபடி அவர்கள் கொலு வைக்க ஆரம்பித்தார்கள்.அழகாக முதல் படியில் கலசம் பின் ஆண்,பெண் மரப்பாச்சிக்களுடன் ஆரம்பித்து கன கச்சிதமாக வைத்து முடித்தனர்..பின் அழகான ரங்கோலி போடப்பட்டது. அருகில் அண்ணா ஹஸாரே உண்ணா விரதம் இருப்பதும் .மியூசிக் அகாடமியில் பாட்டுக்கச்செரி சீனும் மிக அழகாக ஒரு கால் மணி நேரத்தில் செய்து முடித்துவிட்டனர் . “பெரியம்மா நாங்க கொலு வச்சுக்கொடுத்துட்டோம் தினமும் சுண்டல் ,வடை ,பாயசம் செஞ்சு கொடுக்கறோம்.பத்து நாளுக்கும் சேர்த்து சொன்னால் 20% தள்ளுபடி ” “அப்படியா ? சரி எத்தனை சார்ஜ் வாங்கறே?”

“வெத்தலை .பாக்கு. மஞ்சள் குங்குமம் பையோட ரூ,10000.ஆனா இது உங்க வீட்டு சின்னம்மாவோட கம்பெனி .அதனாலே ரூபாயை அவ கிட்டே கொடுத்துடுங்கோ”

“வேறு என்ன ஸ்பெஷல் செஞ்சு தரே?”

“கொலுக்கு முதல் நாளிலிருந்து. கடைசி நாள் வரை புடவை .சட்டை மாட்சிங்காக எடுத்து பிரஸ் செய்து தறோம் .அதுக்கு தனியாக ரூபாய் வாங்கறோம் .ஒரு நாளைக்கு நூறு ரூபாய் .தவிர வாசல்ல மாக்கோலம் காவியுடன் போட்டுக்கொடுக்கறோம்.

இந்த நேரத்தில் லல்லி நுழைகிறாள் . “என்ன பாட்டி .என்ன அம்மா கொலு வச்சாச்சா? ரொம்ப கவலைப்பட்டாயே பயந்தாயே! “நன்னா இருக்குடி இந்த பிசினஸ் ! எத்தன வீட்டை பிடிச்சிருக்கே?

” இது வரை 200 வீடுகளுக்கு ஆர்டர் கிடைத்திருக்கு .இதுக்குன்னு தனியா இரண்டு பேரை ரெக்ரூட்டும் செஞ்சிருக்கேன் அவாளுக்கு நல்ல ஸேலரியும் தரேன் . நமக்கும் நல்ல லாபம் கிடைக்கும் “

“கிடைக்காம என்ன செய்யும் ? இந்தக்காலத்தில் உடம்பு நலுங்காம கொண்டாடத்தானே உங்கள மாதிரி பெண்ணுக்கு பிடிக்கிறது. சரி வேறு என்ன ஸ்பெஷல் வச்சிருக்கே? “அதுவா பாட்டி .இன்னும் நிறைய பிளான் இருக்கு. முகத்துக்கு ஏத்தாற்போல் தலைக்கொண்டை போட்டு விடுகிறோம் தினமும் செய்ய வேண்டிய சுண்டல் பற்றியும் விளக்குகிறோம்.ஆர்டர் கொடுத்தால் பிரசாதம் செய்தும் தருகிறோம் .என்ன அம்மா உனக்கு பிடிசிருக்கா எங்க பிசினஸ்? “லல்லி . நீ சொல்றதெல்லாம கேக்க நன்னாத்தான் இருக்கு.ஆனா சில மாடர்ன் பேமிலி ரொம்ப பெரிய ஹோதாவா கொலு வைப்பாளே,அவாளுக்கு எதாவது ஸ்பெஷல் உண்டா?” “ஒ உண்டே அவாளுக்கு பீஸா .பாஸ்தா ,நூடுல்ஸ்,சௌமீன், ஸ்பிரிங் ரோல் தவிர ஐஸ் க்ரீமும் கொண்டு தருகிறோம் .பிரண்டோட சேர்ந்து சாப்பிட அவாளுக்கு ரொம்ப பிடிக்கும் தவிர ஃப்யூசன் ம்யூசிக்கில் “லலிதா சஹஸ்ரநாமம் “சப்ளை செய்கிறோம் .கர்பா டேன்ஸ் இப்போ பேஷன் ஆயிடுத்து.அதுக்கு தகுந்த பாட்டும் சிடி ல கிடைக்கும் .”

“ஆஹா கேக்கவே ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கே .ம்ம் அப்பறம்” …”

“அப்பறம் நாங்க கொலு காம்படிஷனுக்கும் அப்பிளிகேஷன் பார்ம் தந்து அத பில் அப் செஞ்சு அனுப்பறோம் சரி இன்னும் நாலு வீடு முடிக்கணும் .போய்ட்டு வரோம் பெரியம்மா ” “ஏதாவது சாப்பிட்டு போங்கோ . ஏ ராஜி இவாளுக்கு காபியும் கொஞ்சம் பக்ஷணமும் கொண்டு கொடு ” இதோ வரேம்மா ” என்றபடி ராஜி வர “எள்ளுங்கறத்துக்குள் எண்ணெயா நிப்பா என் மாட்டுப்பெண் ” என்றாள் மாமியார் பெருமையுடன் ,

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கொலு 2015

 1. ரொம்ப அருமை…சாவியின் ஸ்டைலில்
  /*இந்தக்காலத்தில் பக்தியை விட புகழுக்கு ஆசை, தற்பெருமை போன்றவை முக்கியத்துவம் பெருகிறது*/  உண்மை தான்..அதுவும் பேஸ் புக்கில் கவரேஜ் இந்தியா 
  ஆகட்டும் …அமெரிக்கா ஆகட்டும்
  /*.உறவினர்களின் இணைப்பால் குடும்பம் மேலும் வலிமை பெற்றது*/
  இன்று குடும்பத்தை இணைப்பது கைபேசி தான்….டையம் இல்லை
  /*அந்தக்காலத்தில் பணம் குறைவாக இருந்தாலும் மனநிறைவு அதிகமாக இருந்தது*/
  இன்று பணநிறைவினிலும் மனநிறைவு சூன்யம்..ஆசை ஆசை…யாரைவிட்டது..(நாகேஷ்)
  /*“அதென்னடி கொலு கான்ட்ரேக்ட் ?’/ 
      நீங்கள் ஒரு பிஸ்னஸ் மேக்னட்……இத்தோடு ஒரு சமயல் காரர், புரோகிதர் , துணிக்கடை, பேஷன் நிபுணர் சேர்ந்தால் பேஷ் பேஷ். கொலு  டென்ஷன் இல்லாம நிம்மதியா முத்தேவியர் வலம் வரலாம் 2014க்கு பிறகு…(விவரம் தெரிந்தால் 2014லிலேயே ஆரம்பிக்கலாம்…பார்ட்னர்ஸ் தான் தேட வேண்டும்…

 2. அன்பு சத்யமணிஜி என் கட்டுரையை அனுபவித்து படித்து பதிலிட்டதற்கு மிக்க நன்றி .என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *