செண்பக ஜெகதீசன்
மதிப்பு…
உலோகத்தை உருக்கி
உருக்கொடுத்து சிலையாய்,
மனிதன்
உயர்த்திவிடுகிறான் மதிப்பை-
வணங்கும் தெய்வமாக..
மதிப்பு
விலைமதிப்பாகும்போது,
வெளியேற்றப்படுகிறார் கடவுள்
கடத்தல் பொருளாக..
படைத்தவனைப் படைத்தவனே
கடத்துகிறான்
கிடைக்கும் காசைக்
கடவுளாய் எண்ணி..
இப்போது சிரிக்கிறான்
இறைவன்,
இவனைப் பார்த்து…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…