தேவா

 

என் பாட்டி சொல்லும் கதைதான்

என் இரவு நேர தூக்க மாத்திரைகள் ,

காலையில் என்னை எழுப்புவது என் பாட்டிதான் – அன்று

ஏனோ மாலை வரை அவள் எழவில்லை ,

மாலை அணிந்து அவள் படுத்துக் கிடந்தாள் – தலை மாட்டில் விளக்கு ,

எங்கும் மவுனம்

அதைக் கலைத்த சில அழுகைகள் ,

அதையும் தாண்டி தாரை தப்பட்டைகள் ,

அவளை நாலு பேர் தூக்கிச் சென்றனர் , முன்னால் என் தந்தை ,

தீச்சடியுடன் ,

‘அம்மா ,பட்டியை எங்க கூட்டிட்டுப் போறாங்கம்மா ? – .நான் ,

‘பாட்டி சாமி ஆயிட்டா, அதான் கோவிலுக்கு எடுத்துட்டுப் போறாங்க – அம்மா.

‘அம்மா பாட்டிய நிப்பாட்டும்மா இரவு பாதிகதையை சொல்லிட்டு

மீதி கதையை,சொல்லாம போறாங்கம்மா – நானும் அழுதேன்.

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் ,மீள்வதுண்டோ?

எனக்கு தெரியாமல் போனது.

ஒருநாள் கோவிலுக்கு சென்றோம்

என் கண்கள் எதையோ தேடியது ; என் தாய் அதைக் கண்டு ,

‘என்ன தேடுகிறாய் என்றாள்’?

‘சாமியை தேடுகிறேன்’ என்றேன்.

‘அதோ உள்ளே இருக்கிறது சாமி ’, உள்ளே இருக்கும் சிலையைக்

காட்டினாள்.

அந்த சாமி ,இல்லம்மா ,

நம்ம பாட்டி சாமி ஆகிட்டாள்னு சொன்னாயே

அவளைத்தான் ,தேடிக்கிட்டு இருக்கேன்.

என் தந்தையின் கண்களில் ,கண்ணீர்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *