மொழியால் வந்தது பிரச்சனை

1

விசாலம்.

விசாலம்நமக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தால் மிகப் பலன்கள் உண்டு,  இந்தியாவில்  எந்த இடத்திற்குப்போனாலும்  பிரச்சனையில்லை  . சிலர் ஹிந்தி தெரியாமல் வடநாட்டிற்குப்போய் மிகவும் திண்டாடுவார்கள். இதே நிலைமைதான் வடநாட்டில் இருப்பவர்  தமிழ்நாட்டிற்கு வந்தால்  ஏறபடுகிறது தில்லியில் கரோல்பாக் என்ற இடத்து வியாபாரிகள்  தமிழில் எண்ணிக்கையை  கற்றுக்கொண்டிருக்கின்றனர் . தமிழ் தெரிந்தவர்கள் யாரேனும் வந்து விலையைக்கேட்டால்  ,’ஒன்னு  மூனு  ஏழு’  என்று எப்படியோ அந்தப்பொருளின் விலையைச்சொல்வதைப்பார்த்திருக்கிறேன் ,நான் பலரை கரோல் பாக் மார்கெட்டிற்கு அழைத்தும் போயிருக்கிறேன் .

என் வீட்டு வாசலில் சில சமயம் டூரிஸ்ட் பஸ் வந்து நிற்கும் . பல யாத்திரிகர்கள் அதிலிருந்து இறங்குவார்கள்.தமிழ் அறிந்தவர்கள் என்று பார்த்தாலே தெரியும்  அவர்களுக்குச் சில்லென்று குடிக்க  நீரும்  எடுத்துசென்று பின்  வியாபாரஸ்தலத்திற்கும் அழைத்துப்போய் உதவுவது வழக்கம் .அங்கு எல்லோரையும் கவருவது   காலணிகள் . சால்வை,  பெண்கள் கைப்பை   விற்பவனும்  முதலில் விலையை நாலு பங்கு அதிகமாகச் சொல்லி பின் குறைப்பது வழக்கம் .ஆனால் இப்போது அவ்வளவு குறைப்பதில்லை

மொழியால் வரும் பிரச்சனை மிகவும் அதிகம்  .இந்த மொழியினால்  ஏற்பட்ட என்னுடைய ஒரு    அனுபவத்தை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.

ஒரு சமயம் எங்கள் பள்ளி மாணவ மாணவியர் குழுவுடன்  தில்லியிலிருந்து கன்யாகுமரி வரை   அழைத்த்துச் சென்றோம்.     எல்லோரும்  ஹிந்தி பஞ்சாபி பேசுபவர்கள்தான்

ஆகையால் அங்கு நான் தான் ராணி . அவ்வளவு மரியாதை  ஏன் என்றால்    தமிழ் ,மலையாளம் தெரிந்த ஒரே பெண்மணி நான் தான்    தவிர தெலுங்கு புரியும் ஆகையால் ஒவ்வொரு நிமிடமும் என் உதவி அவர்களுக்குத் தேவைப் பட்டது. மாணவ மாணவிகள் ,60 க்கு மேல்  கலந்துக் கொண்டதால் முழு ரயில் போகியையும் புக் செய்து பேனரும் கட்டி  கதவை அடைத்து வைத்தோம்.     உள்ளே  மாணவர்கள்  கும்மாளம் போட அது எங்கள் வீடாகிவிட்டது.     நாங்களும் சிறிது கண்டிப்புடன்  சுதந்திரம் கொடுத்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி     ரயில் விஜயவாடா, வந்தது சில மாணவர்கள் சில தின்பண்டங்கள்

வாங்க கீழே இறங்கினார்கள்.    கதவு திறந்திருந்தது .   அப்போது ஒரு தெலுங்கு மாணவன் உள்ளே ஏறினான்.     கீழே நின்ற ஒரு பெண்ணையும்  கூப்பிட்டான் “இக்ட ரண்டி  .,,,இக்ட ரண்டி”  ஒரு வினாடிதான் திடீரென்று எங்கள் பள்ளி மாணவன் அந்தத் தெலுங்கு பையனைப் பிடித்து, அவன் காலரையும் பிடித்து “மொத்து மொத்து” என்று மொத்தத் தொடங்கினான் அந்த சத்தம் கேட்டு நாங்கள்{ஆசிரியர் குழு} நான் தான் அங்கு அவர்களது வலது கை  .அருகில் போனேன் கைக் கலப்பு   நின்றது,அந்த ஹீரோக்கள் வெற்றியுடன் என்னைப் பார்த்தனர் .

“ஏன்  அவனை இப்படி மொத்துகிறாய் ”
“இல்லை மேடம்  அவன் நம் பெண்களைப் பார்த்து ,,,,,,,,,
,
“ஏன் நிறுத்திவிட்டாய்? மேலே சொல்லு”
“கெட்டவார்த்தைகள் சொன்னான் ”

என்ன சொன்னான்?அதைச் சொல்லு ”
“ரண்டி என்று  சொன்னான்  நம் சகோதரிகளைப் பார்த்து அவன் சொன்னால் நான் சும்மா
விடுவேனா மேடம் ?

அந்தத் தெலுங்கு பிள்ளை திரு திருஎன்று மொழி தெரியாமல்  முழித்தான்.   பின் என்னை பரிதாபமாகப் பார்த்தான். என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறாமல் கூறியது அவன் கண்கள்.
நான் கூறினேன்
“அட பைத்தியமே  தெலுங்கில் ரண்டி என்றால் “வாருங்கள்” என்று அர்த்தம் இக்ட என்றால் இங்கே  என்று அர்த்தம்   அவன் தன் உறவினரை அப்படி அழைத்திருக்கிறான் ‘

‘ஒ அப்படியா மாப் கர்னாஜி  ஸோ ஸாரி  ”    எல்லோரும் அவனை அப்படியே அணைத்துக் கொண்டார்கள்.

ஆமாம்   ஹிந்தியில்  ரண்டி என்றால் என்ன? வேச்யா என்று பொருள்
கெட்ட அர்த்தத்தில் உபயோகிப்பார்கள்  இதை அந்த தெலுங்கு மாணவனுக்கும் விளக்கினேன் .அவன் தன் அழுகையை
நிறுத்தி விட்டு விழுந்து விழுந்து சிரிக்கலானான்.. பின் என்ன? அந்தப் பையன் அரைகுரை ஆங்கிலத்தில் ஒரு போடு போட  நட்பு தொடர்ந்து சீட்டு கச்சேரியில் முடிந்தது
அவன் இறங்கும் இடம் வந்ததும்  ஹிந்தி மாணவர்கள் அவன் கைக் குலுக்கி கீழே இறங்கி  அவனை அனுப்பி வைத்த விதம் மனதைத் தொட்டது
மொழிதெரியாத பிரச்சனை எதில் கொண்டுவிட்டது  பாருங்கள்
நல்ல வேளை நான் இருந்தேனோ அவன் பிழைத்தான்  இல்லாவிட்டால் சினிமாவில் வரும் ஹீரோ வில்லன் சீன் தான்.

இன்னொரு சம்பவம்  சொல்கிறேன் .ஒரு பாலக்காடு  கல்யாணம்  சாப்பிடும் சமயம்  என் அருகில் ஒரு மலையாளி பெண் அமர்ந்திருந்தாள்.    நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம் .

அப்போது இருட்டிக் கொண்டு மழை ஆரம்பமாயிற்று.

:”ஓ தூற்றல் போடுகிறதே  என்று நான்  இழுத்தேன்”

‘எந்தா இங்கன பரையுன்னது  ஊணு  கழிக்காம்போது. “என்றபடி ஒருமாதிரி முகம் சுளுக்கியபடியே
மாற்றிக்கொண்டாள். அதன் அர்த்தம் தெரிந்த்துக் கொண்டபின்  எனக்கே
ஒரு மாதிரித்தான் இருந்தது .

எல்லா மொழியையும் வரவேற்போம்  விரும்பிக் கற்போம் .ஆனால் தாய் மொழிக்குத்தான்
முதலிடம் .வாழ்க தாய் மொழி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மொழியால் வந்தது பிரச்சனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *