திருப்பத்தூரில் தமிழ் இணையம் அறிமுக விழா
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் (தன்னாட்சி) தமிழ் இணையம் அறிமுக விழா, 11.08.2010 அறிவன்(புதன்)கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது.
கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ. மரியசூசை தலைமையில் நடைபெறும் விழாவில் கு.கலையரசி வரவேற்புரையும், பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் அறிமுகவுரையும் ஆற்ற உள்ளனர்.
புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு ‘தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும்’ என்ற தலைப்பில் காட்சி விளக்க உரையாற்ற உள்ளார். க.பிரபாகர் நன்றியுரையாற்றுவார்.
தமிழ் முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், அருகில் உள்ள கல்லூரி சார்ந்த பேராசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ.மரியசூசை செய்துள்ளார். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
படம்: அண்ணாகண்ணன்