வாழ்த்துவோம் புத்தாண்டில்…
சென்ற ஆண்டின் சேதாரங்கள்
சேர வேண்டாம் மனதினிலே,
வென்ற நல்ல வேளையையே
வைத்திடு மனதில் நிலையாக,
இன்று புதிதாய்ப் பிறந்தோமெனும்
இளசைப் பாரதி வாக்கினைப்போல்
என்றும் வாழ்ந்தே வென்றிடுவோம்
என்றே வாழ்த்திடு புத்தாண்டிலே…!
படத்துக்கு நன்றி
http://spoonful.com/printables/mickey-minnies-new-year-celebration-banner