இந்தப் பாடம்…
நாளை மலரப்போகும் மொட்டு
நடுக்கத்துடன் பார்க்கிறது,
அரைக்கண் திறந்து..
நன்றாக மலர்ந்த பூக்கள்
அங்கே
பறிக்கப்படுகின்றன..
நாளைக்கு
நம் கதியும் இதுதானே..
ஆனாலும்,
ஆறுதல் ஒன்று-
வாடி உதிர்வதைவிட
யாராவது
சூடிக்கொண்டால் சிறப்புத்தானே..
கற்றுக்கொள் மனிதா
இயற்கை காட்டும்
இந்தப் பாடத்தை…!
படத்துக்கு நன்றி
http://commons.wikimedia.org/wiki/File:Rosa_pomifera_-_wolley_dod%27s_rose_-_desc-flower_bud.jpg


நாளைப் பற்றி கவலைப் படாமல் ஜனிக்கும்போது
நாளையைப் பற்றி கவலைப் படாமல் ஜன்மம் இருக்கும்போது
இந்தப் பாடம் புரிந்துகொள்வார்களா சரி
நுணுகி அணுகி எழுதப்பட்டுள்ள கவிதை அருமை. வாழ்த்துக்கள் நண்பரே!
கருத்துரைகள் வழங்கிச் சிறப்பித்த திருவாளர்கள்.
சத்தியமணி, சச்சிதானந்தம் ஆகியோருக்கு
மிக்க நன்றி…!