மரணம்
01
நாம் கேட்டுத்தான் அமையவில்லை
இப்பிறப்பு!
நாம் கேட்டேனும் அமையக் கூடாதா
இறுதி நாள் நமக்கு!
***********************
02
ஒருவனின் தொண்டைக் குழியினை
மரணம் அடைத்து விடுகின்ற
வேளையிலே
அவன் வேண்டுவது
என்னை விட்டுவிடு என்றிருக்காது
குதிங்காலிலிருந்து ஏறிவந்த நீ
கூடிய மட்டும் இதனையும் கடந்துவிடு
என்ற கருணை எதிர்பார்ப்பாகத்தானிருக்கும்!
***************************
03
இவ்வுலகின் இறுதி மனிதன்
இறக்கின்ற தருவாயில்
இம்மண்ணிற்கு இதனை வேண்டுகோளாய்
வைத்துவிட்டு மடியட்டும்!
அன்புகளைப் பிரிக்கும்
இவ்விறப்பு அற்ற இனமாய்
தோன்றட்டும்
இனி இங்கொரு இனம் பிறந்தால்!
http://www.sho.com/sho/time-of-death/home
மரணம் ஒரு கொடுமை அதை சந்திப்பதும் மகா கொடுமை. அது அத்தனை மென்மையாக கவிதையில். பாராட்டுக்கள்.
மலேஷிய விமான விபத்து நடந்துள்ள வேளையில் வெளிவந்துள்ள கவிதை. ஆனால் இது போன்ற மரண சம்பவங்கள் அறியப்படும்போது எந்த ஒட்டு உறவு இல்லாதவர்களால் கூட தாங்கிகொள்ள முடிய வில்லை அவர்களின் குடும்பத்தார்க்கு என்ன ஆறுதல் தரமுடியும்?