இவள் பாரதி

AAA_2661

வாழைப்பூவிரல்களை விரித்து

பருப்புக்கடைய

உள்ளங்கை காட்டும் குழந்தை

நண்டூறுது

நரியூறுது சொல்லி

கிச்சுக் கிச்சு மூட்டுமுன்னே

சிரித்துவிடுகிறது

 

====

 

இருமல் சத்தத்தை

இதயத்துக்குள்

வலிந்தனுப்புகிறேன்

உன் உறக்கம்

கலைந்துவிடக் கூடாதென

====

 

விவசாய நிலத்தில்

விதைக்கப்பட்டு

துளிர்த்திருக்கும்

ஒருவார பயிர்களென

ஒருசேர வளர்ந்திருக்கிறது

உன் மொட்டைத் தலை

 

=====

 

ஒவ்வொருமுறையும்

விளையாடுகிறேன்

உன்னிடம் தோற்பதற்காகவே

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சிறுகை அளாவிய கூழ் – 8

  1. மிக அருமை. காட்சி கண்முன் விரிய வார்த்தைகளல் பந்தலிட்டிருக்கும் மங்கைக்கு வாழ்த்துக்கள்.

  2. வாழைப்பூ விரல்கள் – அழகான உவமை. வாழ்த்துக்கள்.

  3. தாயின் அனுபவம் சேயின் மகத்துவம்
    ஆயின் கவிதரும்  அமுதால் மருத்துவம்
    இருகை தட்டியே  மகிழும் பாரதியுன்  
    சிறுகை  அளாவிய கூழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.