Author Archives: இவள் பாரதி

சிறுகை அளாவிய கூழ் – 25

-இவள் பாரதி அதிலும்…  அத்தனை இறுக்கமாகக் குழந்தையின் கையைப் பிடித்திருக்கக்கூடாது அதிலும் அவளின் பச்சைநிற                                                  ப்ளாஸ்டிக் வளையல் உடையும் அளவிற்கு அதிலும் உடைந்த பின்னும் ஒரு சிறுவருத்தம் கூடத் தெரிவிக்காமல் ஒரு மன்னிப்பைக் கோரும் முகபாவமின்றி… அதிலும் அழுகின்ற சின்னஞ்சிறு கையை உதறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறி… அதிலும் பசியுற்றிருந்தும் அந்தச் சின்னவள் தினைப்பொங்கலைச் சாப்பிட மறுத்தபோது பெற்றவள் அருகில் இருக்கிறாளெனத் தெரிந்தும் இத்தனை கோபம் கொண்டிருக்கக்கூடாது அதிலும் அன்பைச் சிரிப்பிலும் அசெளகரியத்தை அழுகையிலும் மட்டுமே வெளிப்படுத்தத் தெரிந்த பச்சை மண்ணிடம்!  காக்காத் ...

Read More »

சிறுகை அளாவிய கூழ் – 24

-இவள் பாரதி வெறுங்கால்களுடன் தெருவில் இறங்கி நடக்கிறாள் செல்ல மகள்!                                                            கல்லும் மணலும் சிவந்த மென்கால்களைப் பதம்பார்க்க… ஒவ்வொரு அடியையும் விரைவாக எடுத்துவைத்து நடந்தே ஓடுகிறாள்! நான்காம் வீட்டிலிருக்கும் நாய்க்குட்டிக்கு மாலை வணக்கம் சொல்லிவிட்டுத் தன் வாயிலிருக்கும் இட்டிலித் துண்டை இருவிரலாலெடுத்து அங்கே வைத்துவிட்டு மீண்டும் வாசல் வருகிறாள்! சிறுதுளையிட்ட தண்ணீர்ப் புட்டியை உறிஞ்சிவிட்டு மீண்டும் தெருவில் இறங்கி ஓடுகிறாள் நான்காம் வீட்டு வாசலுக்கு இரும்புக் கம்பிகளின் வழியே உற்றுப் பார்க்கிறது நாய்க்குட்டி!

Read More »

சிறுகை அளாவிய கூழ் ( 23)

-இவள் பாரதி   நட்சத்திரப் பூக்களைக் கைநீட்டிப் பறிக்க ஆசைப்படும் குழந்தையிடம்                                                                     கைக்கெட்டும் தூரத்தில் மலர்ந்திருக்கும் முல்லைப் பூக்களைக் கொய்யக் கற்றுத்தருகிறேன்! அல்லி இதழில் ஒன்று உன் கையில் ஒட்ட அந்த ஓரிதழை வாயில் வைத்துச் சவைத்துத் துப்புகிறாய்… கொய்தபோது கீழே விழுந்த ஒன்றிரண்டு பூக்கள் நட்சத்திரங்களாகத் தெரிய இப்போது இடுப்பிலிருந்து நழுவிக் கீழிறிங்க முனைகிறாய்! நட்சத்திரப்பூக்கள் காற்றில் மெதுமெதுவாய் நகர்கின்றன… அதன்பின்னே நீயும் தத்த உன் பின்னே நானும்!  

Read More »

சிறுகை அளாவிய கூழ் (22)

-இவள் பாரதி தாய் தேடுமென எல்லாக் குஞ்சுப் பறவைகளும் கூடடைய விரைகின்றன!                                         என் குழந்தை நீ தேடுவாயென கூடடைய விரைகிறேன் போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்போன இப்பெருநகர சாலைகளில்! ————– நீ முதன்முதலாய் எ(ன்)னையழைத்தபோது மீட்டெடுத்துக் கொண்டேன் கடந்த சில வருடங்களாய் நான் புழங்காமல் விட்டிருந்த ’அம்மா’ எனும் சொல்லை! ————— உன் பால்பற்களுக்கும் மென் உதடுகளுக்கும் நாவசைப்பதற்கும் இடையில் இடறி விழுகின்ற தப்பி வருகின்ற துளிர்த்துத் தெறிக்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் உயிர்மெய் எழுத்துகளில் ஏதேனும் ஒன்றாகத்தானிருக்கின்றன!  

Read More »

சிறுகை அளாவிய கூழ் (21)

  இவள் பாரதி   ’குட்டியைப் பிடி’ என்றதும் வேகமாக எட்டெடுத்து வைத்து அறைக்குள் ஓடி எட்டிப் பார்க்கிறாய்.. தள்ளிய முன்வயிறும் குட்டி உருவமுமாய் மீண்டும் தத்தி தத்தி நடந்து பொத்தென்று விழுந்து மீண்டும் எழுந்து குடுகுடுவென நடக்கிறாய்.. உன்னை ரசித்து ரசித்து பூரிக்கிறேன்.. என்னிடம் செலவாகாமலிருந்த நேற்றைய கண்ணீர்த்துளியொன்று இப்போது புன்னகையாக மாறி சேமிக்கப்படுகிறது ——————————— அலுவலகம் செல்ல கையசைத்து விடைபெறும்போது குரலுயர்த்தியழுது தெருவையே கூட்டிவிடுகிறாய் சிறிது நேரத்தில் உன் கவனம் திசைமாறி விளையாட்டில் செல்ல அதையே நினைத்து கலங்கியிருந்தேன் செல்லும் வழியெங்கும் ...

Read More »

சிறுகை அளாவிய கூழ் (20)

இவள் பாரதி   ஏதேதோ காரணங்களால் அவசரப்பட்டு அடித்துவிட்டு துடித்துக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொருமுறையும் அடித்த மறுநொடி மடிநோக்கி வரும் குழந்தையை முத்தமிட்டுக் கொஞ்சும்போதெல்லாம் குற்ற உணர்வில் குமைகிறேன் இயற்கையே வரம் தருவாய் அத்தனை துயரிலிருந்தும் விடுபட்டு நானுமொரு குழந்தையாய் மாற ——————– எந்தக் காதல் பாடல்களைக் கேட்டாலும் எங்கே காதல் கவிதைகளைப் படித்தாலும் உனக்காக நான் பாடுவதைப் போலவும் உனக்காக நான் எழுதுவதைப் போலவும் நினைத்துக் கொள்கிறதென் தாய் மனம் கவிதையோ பாடலோ எழுதப்பட்ட வரிகள் எல்லாம் உன்னையே பிரதிபலிக்கின்றன எழுதப்படாத கவிதைகளும் பாடப்பெறாத ...

Read More »

சிறுகை அளாவிய கூழ் (19)

  இவள் பாரதி   எல்லாவித அழுத்தங்களிலிருந்தும் விடுபட போதுமானதாயிருக்கிறது உன் புன்னகை ————————— உனதசைவின் ஒவ்வொரு கணத்தையும் சேகரிக்க முயன்று கைக்கொள்ளாமல் கவிதையில் பத்திரப்படுத்திவிட்டு மீண்டும் சேகரிக்கிறேன் அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரமாய் அசைவுகளால் நிரப்புகிறாய் வழிந்தோடி நிரம்பி மூழ்கடிக்கிறது என்னை மீளத்துணியாமல் மிதக்கிறேன்

Read More »

சிறுகை அளாவிய கூழ் (18)

  இவள் பாரதி   இரையள்ளித் தூவியதும் கூட்டமாக நீந்திவரும் தொட்டிமீன்களைப் போல வீட்டுக்குள் நுழைந்ததும் கைகளையும், தலையையும் அசைத்து தத்திவந்து தாவியேறுகிறாய் ஆடைகளைப் பற்றி என்னுடல்மீது ————— வெற்றிடம் நோக்கி விரையும் திரவத்தைப் போல அம்மாகுட்டி ஓடுகிறாள்.. ஓடிப்பிடிக்க முடியாமல் தடுமாறும் பாட்டி குரலில் கடுமை காட்டுகிறாய்.. திரும்பிப் பார்த்துச் சிரித்து மேலும் வேகமெடுத்து ஓடுகிறாள் பின்னால் விரையும் பாட்டி எட்டிப் பிடிக்குமுன் மாடிப்படியேறி மேலே போய் நின்றபடி இருகையையும் நீட்டுகிறாள் பதறும் பாட்டி முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டு மெதுவாக படியேறி குட்டியைப் ...

Read More »

சிறுகை அளாவிய கூழ் (17)

  இவள் பாரதி   ஒரு பக்கத்தை வாயில் சுவைத்தபடியும் மறுபக்கத்தை கையில் பிசைந்தபடியும் விளையாடி ஏதோ நினைவு வந்ததைப் போல பக்கங்களை மாற்றி முகம் பார்த்து முலைப்பாலருந்தியபடி தாயின் சிரிப்பிற்கு சிவப்பு உதடு விரித்து அதில் இரண்டு பால்பற்கள் தெரிய சிரித்து குடிப்பதை நிறுத்திவிட்டுக் காம்பைக்கிள்ளி விளையாடி அடடா.. ஆஹா.. ஏழு வண்ணத்திலும் வடித்துவிட முடியாத ஓவியம் எந்த மொழியிலும் எழுதிவிட முடியாத கவிதை ———————- வெடி வெடிக்கும்போதும் இடி இடிக்கும்போது அயர்ந்துறக்கும் அம்மாகுட்டி பேனா மூடி விழும்போதும் பேப்பரைத் திருப்பும்போதும் எழும் ...

Read More »

சிறுகை அளாவிய கூழ் (16)

  இவள் பாரதி உனக்கு எப்போதெல்லாம் வெளிப் போந்த தோன்றுகிறதோ அப்போதெல்லாம் சிவப்புச் செருப்பை ஏந்தியபடி அறைகள்தோறும் ஒவ்வொருவராய் அழைத்துப்போகச் சொல்லிக் மூடியிருக்கும் கதவை கைகாட்டுகிறாய்..

Read More »

சிறுகை அளாவிய கூழ் – 14

இவள் பாரதி ஓடி ஒளிந்து கொள்ளுமென்னைத் தேடி வரும் கொலுசொலி கதவருகே வந்து எட்டிப் பார்த்து சட்டென மாறுகிறது சிரிப்பொலியாய் ————-

Read More »

சிறுகை அளாவிய கூழ் – 13

இவள் பாரதி விளம்பரங்களைக் கண்கொட்டாமல் பார்க்கும் குழந்தை தொடர் ஆரம்பித்ததும் தலை திருப்பிக் கொள்கிறது..   அதுவரை குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி கண்ணிமைக்காது பார்க்கத் துவங்குகிறார் தொலைக்காட்சித் தொடரை…   ————— அடிக்கடி தத்தி நடப்பதில் ஆர்வம் கொள்ளும் அம்மாகுட்டி அவ்வப்போது இருட்டறைக்குள் சென்று கொஞ்சம் புன்னகை தூவி வந்துவிடுகிறாள் ஒளிர்கிறது அந்த வீடு நள்ளிரவு கடந்தபின்னும்

Read More »

சிறுகை அளாவிய கூழ் – 12

இவள் பாரதி அறையெனும் பூமிப்பந்தில் உறங்கும் குட்டிச் சூரியனே நீ விழித்ததும் விடிகிறதெனக்கு ————————– குழந்தைக்கு ஊர்கண் பட்டிருக்கும் சுத்திப் போடு என்கிறார்கள் உன்னை அணுஅணுவாய் ரசிக்கும் என் கண்ணும்பட்டிருக்கும் என் காலடிமண்ணை எடுத்துத்தர சம்மதம்தான்   இந்த சிமென்ட் பூச்சுத் தரைகளில் எப்படி எடுப்பது நகத்தளவு மண்ணை தெருமுனைக்குச் சென்று தானே வளர்ந்திருந்த செடிக்கருகிலிருந்து சிறிதுமண்ணை எடுத்து வந்து அதன்மீது நடந்து தந்துவிட்டேன் உன் பாட்டியிடம் இனி உனக்குக் காய்ச்சல் அடிக்காது கண்ணே..   ————-  

Read More »