-இவள் பாரதி

 

நட்சத்திரப் பூக்களைக்nivi-192x3001
கைநீட்டிப் பறிக்க
ஆசைப்படும் குழந்தையிடம்                                                                    
கைக்கெட்டும் தூரத்தில்
மலர்ந்திருக்கும்
முல்லைப் பூக்களைக்
கொய்யக் கற்றுத்தருகிறேன்!

அல்லி இதழில் ஒன்று
உன் கையில் ஒட்ட
அந்த ஓரிதழை வாயில் வைத்துச்
சவைத்துத் துப்புகிறாய்…
கொய்தபோது கீழே விழுந்த
ஒன்றிரண்டு பூக்கள்
நட்சத்திரங்களாகத் தெரிய
இப்போது இடுப்பிலிருந்து
நழுவிக் கீழிறிங்க முனைகிறாய்!

நட்சத்திரப்பூக்கள் காற்றில்
மெதுமெதுவாய் நகர்கின்றன…
அதன்பின்னே நீயும் தத்த
உன் பின்னே நானும்!

 

1 thought on “சிறுகை அளாவிய கூழ் ( 23)

  1. நட்சத்திர பூக்கள்
    காற்றில் மெதுவாய் பறக்க
    அதை கொய்ய முழு நிலவாம் நீ தத்த
    பரந்த வானமாய் உங்கள் பின்னே நானும்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க