காதல் நாற்பது – எலிஸபெத் பிரௌனிங் [4, 5, 6, Three Poems

 

jay
எலிஸபெத் பிரௌனிங்

(1806-1861)

 

காதல் நாற்பது (4)

தனிமைக் கூக்குரல் !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உன்வசம் உள்ளது உன் பிறவிப்பணி !
உனக்கு அழைப்பு வருகிறது
சிற்சில செல்வ மாளிகை
அரங்கத்திலே!
உன்னதப் பாக்களை
மிக்க நளினமாய்ப்
பாடுவோனே !
உன் கர்ப்ப உதடுகள் உதிர்ப்பதை
மென்மேலும் கேட்டு,
நடன மாடுவோர் கால்கள்
இடறி முறிந்து போய் விடும்!
உன் உன்னத கைகளுக்குக்
கீழ்மை யான, இந்த
ஏழ்மை மாது இல்லத்தின்
தாழ்ப்பாளைத் திறப்பாயா ?
உனக்குத் தெரியாமலே
உன்னிசைக் கீதங்கள்
பூரணப்
பொன் அலைகளாக
என்னில் லத்தின் வாசல்
முன்னே வருவது பற்றி
என்ன நீ
நினைக்கிறாய் ?
ஏற்று அதைத்
தாங்கி கொள்வாயா ?
என் வீட்டுக் கூரைக் குள்ளே
பறக்கின்றன,
வௌவாலும் ஆந்தைகளும் !
என் விட்டில் போன்ற
கீச்சுக் குரல்
உன் மகரயாழ் முன்னே
எப்படிப் போட்டி இடும் ?
மெதுவாக முணு முணுப்பேன்,
மேலும்
என்னை ஒதுக்கி விட்டு
விலகுவது
எதிரொலிக் கப்படுமா ?
ஏகாந்தனாய்த்
தனித்து நீ
இனிதே பாட வேண்டி யிருந்தால்
அழுதிடும் என் நெஞ்சுக்குள்
எழுந்திடு மோர்
அவலக் குரல் !
********************
Poem -4

Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
Thou hast thy calling to some palace-floor,
Most gracious singer of high poems! where
The dancers will break footing, from the care
Of watching up thy pregnant lips for more.
And dost thou lift this house’s latch too poor
For hand of thine? and canst thou think and bear
To let thy music drop here unaware
In folds of golden fulness at my door?
Look up and see the casement broken in,
The bats and owlets builders in the roof!
My cricket chirps against thy mandolin.
Hush, call no echo up in further proof
Of desolation! there’s a voice within
That weeps . . as thou must sing . . . alone, aloof.
**********
காதல் நாற்பது (5)
காதற் கனலை மிதிக்காதே !
மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கனத்துப் போன என்னிதயத்தை
மரணத் துயரில் தாங்கி
நடமாடுகிறேன்!
முன்னொரு காலத்தில் அவ்விதம்
மரண மதச்சடங்கில்
கிரேக்கப் பெண் எலெக்டிரா (*)
தூக்கிப் போனாள்,
இறந்த தந்தையின்
எரிச்சாம்பற் கலசத்தை !
உந்தன் கண்களுக்குள் உற்று நோக்கி
உன்னிரு பாதங்கள் மீது,
குப்புறத் தட்டினேன்
எரிச் சாம்பலை!
ஏறிட்டுப் பார் என்னை!
எவ்விதக்
கோரக் துயர்க் குவியல்
எனக்குள்
பதுங்கி யுள்ள தென!
எரித்த கருஞ் சாம்பல் ஊடே
செங்கதிர்ப் பொறிகள்
மங்கலாய்
எழுந்திடும் தெரியுமா ?
என்மேல் உள்ள வெறுப்பில்
உனது கால்கள் அக்கொடும்
கனல் மீது மிதித்து,,
முழுவதும்
இருளாகி விட்டால்
ஒரு வேளை
அதுவும் எனக்கு நல்ல தாகலாம் !
அப்படி யின்றி
காற்றடித்து அணைக்கு மென
என்னருகே நீ
காத்திருந்தால்
எரிச் சாம்பல் தூசி
கிரீடமாய்ப் படியும் உன்
சிரம் மீது !
என்னினிய காதலனே !
அவ்விதம் நீ
கவசமிட்டுக் கொள்ள லாமா,
தவிர்த் தென்னை ?
தீக்கனல் பொறி எவையும்
தோலுக்குக் கீழிருக்கும்
உரோமத்தை
கரித்துத்
துண்டிக்க மாட்டா !
தூரமாய் நில்,
விலகிப் போ
வெகு தொலைவில் !

+++++++++++

(*) Electra

In Greek mythology (Trojan War) Electra was daughter of Agamemnon and Clytemnestra .

Electra was absent from Mycenae when her father, King Agamemnon, returned from the Trojan War and was murdered by Aegisthus, Clytemnestra’s lover, and/or by Clytemnestra herself. Aegisthus and Clytemnestra also killed Cassandra, Agamemnon’s war prize, a prophet priestess of Troy. Eight years later Electra was brought from Athens with her brother, Orestes). According to Pindar, Orestes was saved by his old nurse or by Electra, and was taken to Phanote on Mount Parnassus, where King Strophius took charge of him. In his twentieth year, Orestes was ordered by the Delphic oracle.
to return home and avenge his father’s death. According to Aeschylus, he met Electra before the tomb of Agamemnon, where both had gone to perform rites to the dead;

********************

Poem -5

Sonnets from the Potuguese

By: Elizabeth Browing
I lift my heavy heart up solemnly,
As once Electra her sepulchral urn,
And, looking in thine eyes, I overturn
The ashes at thy feet. Behold and see
What a great heap of grief lay hid in me,
And how the red wild sparkles dimly burn
Through the ashen greyness. If thy foot in scorn
Could tread them out to darkness utterly,
It might be well perhaps. But if instead
Thou wait beside me for the wind to blow
The grey dust up, . . . those laurels on thine head,
O my Belovழூd, will not shield thee so,
That none of all the fires shall scorch and shred
The hair beneath. Stand farther off then! go.

**********

 

காதல் நாற்பது (6)
தனித்த வாழ்வு வேண்டாம் !
மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

என்னை விட்டுத் தள்ளிப் போ !
என்றாலும்
உணர்வு வரும் எனக்கு
உன் நிழலில் தான்
நிற்க வேண்டும் என்று !
என் முன்வாசலில் தனித்து நின்று
ஏகாந்தியாய்
இருக்க விருப்ப மில்லை!
ஆணை இடுவேன்,
ஆத்மா நற்பயன் அடைய !
பரிதி வெளிச்சத்தில் பிறர்க்குக்
கை அசைக்கப் போவதில்லை
மௌனமாய் !
என் உள்ளங்கை தன்னை
உன்கரம் தொடுவதால் உண்டாகும்
இன்ப உணர்வை
இழந்திட மன மில்லை !
உன் நெஞ்சு என்னிதய முடன்
பின்னிக் கொண்டு
இரட்டைத் துடிப்பு எழும் போது
பரந்த புவித் துயர்கள்
பிரிக்க முனையும்
இருவரையும் !
திராட்சையின் சுவைதனை ஒயின்
பானமும் தருவது போல்
காணும் என் கனவிலும்,
புரியும் என் பணியிலும்
உருவாய் இருப்பது நீயேதான் !
கடவுள் மீது முறையிட்டுத்
தொடரும் வழக்கில் அவர்
காதில் விழுவது உன் பெயரே !
கடவுள் எனை நோக்கின்
காண்பது,
கண்ணுக் குள்ளிருக்கும்,
இருவரின்
கண்ணீர்த் துளிகள் !
********************

Poem -6

Sonnets from the Potuguese

By: Elizabeth Browing

http://members.aol.com/ericblomqu/brownine.htm
Go from me. Yet I feel that I shall stand
Henceforward in thy shadow. Nevermore
Alone upon the threshold of my door
Of individual life, I shall command
The uses of my soul, nor lift my hand
Serenely in the sunshine as before,
Without the sense of that which I forbore–
Thy touch upon the palm. The widest land
Doom takes to part us, leaves thy heart in mine
With pulses that beat double. What I do
And what I dream include thee, as the wine
Must taste of its own grapes. And when I sue
God for myself, He hears that name of thine,
And sees within my eyes the tears of two.

**********

 

About சி.ஜெயபாரதன்

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு].

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க