திருமால் திருப்புகழ்

திருமால் திருப்புகழ் (29)

கிரேசி மோகன்

vishnu-garuda-847x1024

தனன தனதான தனன தனதான
தனன தனதான தனன தனதான -தனதான….

————————————————————————————————————————
“பிளிரும் கஜம்வாழ பறவை முதுகேறி mother_child_PH71_l
ஒளிரும் சுடரேந்தி முதலை தலைசாய -விரைவோனே
தளர இடையாடை திலக நுதல்கூன
தலையின் மயில்பீலி சரிய படையோடு -மெதுவாக
துயில இடையாயர் தளிகை அறைதாவி
உறியில் தயிர்பாலை திருட வரும்போது -விரைவோனே
குளிர குளமாடும் மகளிர் அணிசேலை
உருவி கரைமேவி மருத மரமேறி -மெதுவாக
அலறி ஒருநாளில் அழுத மகள்சோகம்
விலக துணிசேர்க்க விரையும் மெதுவான -பெருமாளே
—————————————————————————————–

 

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க