அன்புசிவ வெண்பாக்கள்

0

 

கிரேசி மோகன் 

Lord Shiva HD Wallpapers 6

காப்பு
——–
பழமளித்த தந்தை புரமெரித்த போது12056_468338519868554_1663975219_n
தொழமறக்க தேர்கால் துணித்த -அழகா
தளைதட்டா வெண்பாக்கள் தந்ததில் பக்திக்
களைகட்ட கற்பகச்சேய் காப்பு….03-07-2011
————————————————————-
நூல்
——-

அப்பர் தமிழ்கேட்டு வெப்பக் களவாயை
அப்பிய சந்தனமாய் ஆக்கியோய் -தப்பில்
குதியிட்டுத் தாழ்ந்தேன் மதியில் சதங்கை
ஜதியிட்டுத் தாண்டவ மாடு….(1)

 
அசையும் உயிரில் அசைவாய் இருந்து
அசையாது நிற்கும் அரனே -அசைந்து or இசைந்து
பசையாய் இடபாகம் பற்றிய உமையும்
அசைந்திடத் தாண்டவ மாடு….(2)

எண்ணாத போதிலும் எண்ணும் எழுத்துமாய்bhimashankar jyotirling famous shivaji temple at india pictures
உண்ணா முலைசமேத ராகஉந்தன் -முன்னாலே
அண்ணா மலையான் அடியெடுத்து வைத்திடுவான்
பின்னாலே நீசுற்றும் போது….(3)….02-04-2008

 
இல்லையென்று சொல்வோர்(கு) இயம்ப பதிலில்லை
தில்லையில் என்வீட்டுத் திண்ணையில் -இல்லையேல்
கொல்லையில் நான்மட்டும் காண்பதற்கு இல்லையென்று
சொல்லாது தாண்டவம் ஆடு….(4)

 
இல்லம் புகந்தன்று பிள்ளைக் கறியுண்டு
வெள்ளை மனச்சிறுத் தொண்டர்தம் -உள்ளத்தை
சோதித்த ஆண்டவா சொக்கநாதா என்நெஞ்சில்
தாதித்தை தாண்டவம் ஆடு….(5)

 
கால்கட்டு சுந்தரர்க்கு கைகட்டு போட்டவரின்
மால்கட்(டு) அவிழ்த்த மகாதேவா -நூல்கட்டிMallikarjuna_ShivLing_500x375
ஆட்டுவிக்கும் அம்பலனே ஆடுமிந்த பொம்மையை
ஆட்படுத்த தாண்டவம் ஆடு….(6)

காளை அமர்ந்தோனுன் காலைப் பணியுமென்
வேளை வரவேண்டும் வெண்பாவில் -காளமேகம்
போலாக்கு முத்தமிழில், நின்புகழை முப்புரி
நூலாக்கிப் பூணுமென் நெஞ்சு….(7)….23-1-2009

நஞ்சானால் நெஞ்சில் நதியானால் நீள்முடியில்
மஞ்சானால் மாகயிலை மாடியில் -பஞ்சானால்
தீக்கண் புகுந்தேனும் தீய்ந்திடுவேன் ஏனெதற்கு
போக்கத்துப் போனேன் பிறந்து….(OR)
போக்கத்த மாயப் பிறப்பு….(8)….23-1-2009

தலைப்பிள்ளை ஆறு தலைப்பிள்ளை சூழOMKARESHWAR2-18082011-052309._omkareshwar-jyotirlinga-shiva-temple-khandwa-mp
மலைப்பெண் மதங்கர் மகளோ(டு) -அலைப்பெண்
கலைப்பெண் சமேத கயிலைக் குடும்பி
முளைத்தென் மனதில் மலர்….(9)….23-1-2009

நீறாணை காற்று நிலமனல் நீள்விசும்பு
நீரானைப் போற்றி நெகிழ்ந்திட -நீராணை
இட்டால் நினக்குள்ளே கட்டாயம் வந்திடுவான்
பிட்டால் சுமந்தான்மண் பண்டு….(10)….23-1-2009

அம்போவென்(று) என்னை அகிலத்தில் ஆடவிட்ட
சம்போ மகாதேவா சிந்திப்பாய் -உன்போல்
மனையாள், இரண்டு மகன்கள் பெற்ற
இணையாம் எனக்கேன் இழிவு….(11)….22-1-2009

எனையாளும் ஈசா எனதுயிர் ஸ்வாசா
வினையாள லாமோசர் வேசா -துணையாவாய்Mahakal_Ujjain
மன்றாடிக் கேட்கின்றேன் மாயப் பசிநீக்கி
அன்றாடங் காய்ச்சிக்(கு) அருள்….(12)….22-1-2009

சுகம்தரும் சொல்லை சிவனென்று கண்டேன்
புகலெனெக்(கு) உந்தனிரு பாதம் -பகலிரவாய்
தொந்திரவு செய்வேன் திருவருள் கிட்டிட
உன்தயவு ஒன்றே உரம்….(13)

தில்லை சபேசா திகம்பர வேஷாகேள்
இல்லை பணிவென் இதயத்தில் -வள்ளலே
வாயென்மார் மீதேறி வாலையுடன் வந்தாடி
நாயன்மா ராக நிமிர்த்து….(14)….21-1-2009

விடையவரே கேளும் வினாவினை தீ£ரும்trayambakeshwar-jyotirlinga-2
அடைய முடியவில்லை ஆன்மா -தடையாய்
மனம்நெஞ்சு மூளை மதியுள்ளம் என்று
பிணம்தின்னும் பஞ்சவரைப் போக்கு….(15)….21-1-2009

பனிமலை வாசா பரசிவ வாச
முனிமன நேசா மஹேசா -இனிவரை
காத்திருக்கும் என்னுள்ளே காத்திருக்கும் போதேநீ
தூத்திவிடு தேடல் திளைப்பு….(16)….21-1-2009

 
கண்ணாலே முப்புரத்தைக் காமனைத் தீயிட்ட
அண்ணா மலையுன் அடிமுடியை -எண்ணிலேன்
முப்புறமும் காமத்தில் மூழ்கியயித் தீயோனை
அப்பனே ஆதரித்(து) ஆற்று….(17)

 
கழுதை மனமே பழுதைச் சுமந்துthe temple of india  maharastra at  grishneshwar jyotirling  photo gallery free download
பொழுதைக் கழித்தது போதும் -தொழுது
வணங்கிட பார குணங்களை ஏற்பான்
அணங்கை சுமக்கும் அரன்….(18)

மண்சுமந்து பிட்டுக்குப் புண்சுமந்தாய் மேனியில்முக்
கண்சுமந்து கந்தனைக் கண்டெடுத்தோய் -பெண்சுமந்த
பாகத்தோய் நஞ்சுண்ட தாகத்தோய் என்நெஞ்சில்
ஆகமத் தாண்டவம் ஆடு….(19)

 
முடவனன்று வேண்ட தடதடவென்(று) ஓடி
குடமுழுக்(கு) ஆடிய கும்பேசா -விடமுண்டோய்
ஆடை கரித்தோல் அணிந்தெனது நெஞ்சமாம்zzzevaijnath9
மேடையில் தாண்டவம் ஆடு….(20

நாம்நமதை விட்டு நமச்சிவாய நாமத்தை
ஒம்நமஹ சேர்த்தென்றும் உச்சரிப்போர் -காமமதை
வென்றிடக் கைகொடுக்கும் விஸ்வேசா என்நெஞ்ச
மன்றிடைத் தாண்டவம் ஆடு….(21)

நாரதன் தும்புரு நந்தி மிருதங்கம்
பாரதி வீணை பயின்றிட -வாரிதி
வானைப் பிடித்திட வையம் அறிந்திட
தாணுவே தாண்டவம் ஆடு….(22)

 
நாவாரப் பைந்தமிழில் தேவாரப் பிள்ளைக்குப்
பாவூற வைத்த பரமசிவா -பூவாரம்
கொன்றையும் கங்கையும் கொண்டையில் சூடியோய்
என்றென்முன் தாண்டவம் ஆடு….(23)

lord-shiva-31v
ஒருமுறை யேனும் அருணா சலத்தை
கிரிவலம் செய்யக் கிடைக்கும் -கருவினில்
தோன்றி இடுகாட்டில் தூங்கும் பரிட்சையைத்
தாண்டிக் கயிலாயத் தேர்வு….(24)

 
பதினாறைப் பெற்றோன் பெருவாழ்வைப் போக்க
அதிகாரம் செய்த எமனை -குதிகாலால்
எட்டி உதைக்க எழுந்த பதமென்மேல்
பட்டிடத் தாண்டவம் ஆடு….(25)

 
பெரிய புராணம் படித்தறி யேனேimages (4)
நரியைப் பரியாக் கியவா -இறைவாநான்
நாயன்மார் ஆகிஉன் நாமம் ஜபித்திட
நீயென்மார் தாண்டவம் ஆடு….(26)

 
பிரிவோடு வாழ்ந்த திருநீல கண்டன்
உறவோடு சேர உகந்தோய் -திருவாரூர்
த்யாகேசா தில்லை நடராசா நெஞ்சத்(து)
ஆகாசம் தாண்டவம் ஆடு….(27)

 
பூசலா நாயனாரின் மாசிலா நெஞ்சத்து
வாசியாக கோயில் வளர்த்தோய் -காசிக்கு
வந்துன்னைக் காண்போரை வாழ்விப்போய் என்நெஞ்சில்images (3)
தந்தனத்தோம் தாண்டவம் ஆடு….(28)

 
தவக்களை வாயினால் தத்துவம் பேசி
சவக்களை ஆனது சிந்தை -தவக்களை
வீச இமயத்தே வீற்றோய் எனக்கருள்
ஓசை அடங்கிய ஓம்….(29)

 
தேனீக்குப் போட்டியாய் மாணிக்க வாசகன்தன்
ஆணிப்பொன் பாக்கள் அருந்தியுந்தன் -தீவிக்கும்
கண்டத்து நஞ்சை அமுதாக்கிய சங்கரா
பண்டைஊழ் தாண்டவம் ஆடு….(30)

bhimashankar jyotirling famous shivaji temple at india pictures
விழிமலர்த் தூவி வழிபட்ட வேடன்
அழிவிலா நாயன்மா ராக -வழிவகுத்தோய்
நானார் அறிந்திட நீயென்னுள் ஆனந்தக்
கோனாராய் தாண்டவம் ஆடு….(31)

அறையாய் உமைக்கு அரையை அளித்த
அரனே அடியார்க்(கு) அரணே -அறமே
பொருளே சுகமாம் பயனே பரமே
மருளே வராது மகிழ்த்து….(32)….23-1-2009

 

மாசில் வீணையும் பாதிப்பில்
————————————-

சங்கீதம் சந்திரன் சாத்வீக மாருதம்images (7)
இங்கிதம் கூட்டும் இளவேனில் -தங்கித்தேன்
தின்னும் கருவண்டின் தீர்த்தக் கரையாம்முக்
கண்ணன்தன் சீதக் கழல்….(OR)
கண்ணன் குளிர்ந்த கழல்….(33)….24-1-2009

கொழிக்கும் புலனைவர் கூட்டத்தின் கொட்டம்
அழிக்கும் கடவுளே அன்பாய் -விழிக்கும்
சிவனே உமையாள் கவனம் தவிர்த்து
இவனே கதியென்(று) இரு….(34)

முதற்பிள்ளை நெஞ்சில் நுதற்பிள்ளை கண்ணில்
சதிர்க்கென்று மேனியில் சக்தியுமை -முதற்குன்றாம்images (8)
வெண்வரை வாசா வறியவனென் வாய்மூட
மந்திர மானது நீறு….(35)….24-1-2009

கொழிக்கும் புலனைவர் கூட்டத்தின் கொட்டம்
அழிக்கும் கடவுளே அன்பாய் -விழிக்கும்
சிவனே உமையாள் கவனம் விலக்கி
இவனே கதியென்(று) இரு….(36)….24-1-2009

கூத்தபிரான் தீமையைத் தீர்த்தபிரான் தென்முகம்
பார்த்தபிரான் வாமபாகம் பார்வதியை -சேர்த்தபிரான்
தீர்த்தபிரான் வெண்ணீறால் நீர்த்தபிரான் (OR) ஆனைத்தோல் போர்த்தபிரான் அன்புக்குத்
தோற்த்தபிரான் சேவடி தொழு….(37)….17-2-2009

ஆடிய பாதன் அயன்மால் அடிமுடி Mahakal_Ujjain
தேடிய பாதன் திருவிளை -ஆடிய
பாதன் அடியவர் பேதம் அறுத்திடும்
நாதன் திருவடி நண்ணு….(38)….16-2-2009

கூடலில் சொக்கேசன் ஆடலில் அம்பலத்தோன்
பாடலில் நாயன்மார் பண்ணாவான் -தேடலில்
தென்முகம் நோக்கித் தவம்செய்யும் நாயகனின்
பன்முகம் எண்ணாநாள் பாழ்….(39)….17-2-2009

வெளுத்த உடலும் வரிப்புலித் தோலால்
வளைத்த இடைவாழ் வனப்பும் -திளைத்த
இமய மலையில் இமைகள் குவித்து
அமையும் அரன்தொழில் அன்பு….(40)….17-2-2009

கைவல்யம் கேட்கிலேன் கைலாசம் வேண்டிலேன்images (11)
பொய்மல்கும் வாழ்விலாடி பிம்பமாய் -செய்யென்னை
தெய்வமே தேசிகா உய்ய உபதேசம்
செய்வாயா சங்கரா செப்பு….(41)….17-2-2009

 
துன்மார்கப் பாதையில் அந்தக னாய்ச்சென்று
கண்வேர்த் திடநான் களைப்புற்றேன் -சன்மார்க
பந்துவே சங்கரா ஈசான்ய மூலைக்கு
வந்தென்னைத் தள்ளி விடு….(42)

 
வரத்தினால் பூமிக்கு வல்லூறாய்ப் போன
மருத்துவனைக் காலால் மிதித்தோய் -சிறுத்தimages (10)
விகார அகந்தை விலகதிரு வெண்கா
அகோரமூர்த்தி

நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
நேயமாவான் வெவ்வினையால் காயமானால் காப்பாற்ற
நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
தாயுமாவான் தந்தை தவித்து….(44)….10-3-2009

ஆர்வம் முறுக்கிட ஆசை கிழித்திட
போர்வை மனது பலநூறு – நார்நாராய்
கந்தையா னாலும் கசக்கிக் கட்டிட
புந்தியை ஈசா பிழி….(45)

சம்பந்த அண்ணனும் கம்பத்து பிள்ளையும்shiva-statue-nageshwar-jyotirlinga-temple-dwarka
அம்பைஉண் ணாமுலையும் சூழ்ந்தாலும்-நம்பந்தம்
நீக்கிடுவான் ஸ்ரீரமணர் ஆக்கிடுவான், நானொழிய
ஆக்கிரமித்(து) ஆள்வான் அரன்….(46)….24-03-2008

கண்ணாலே முப்புரத்தைக் கற்பூரம் ஆக்கிய
அண்ணா மலையுன் அடிமுடியை-எண்ணிலேன்
முப்புறமும் காமத்தில் மூழ்கியயித் தீயோனை
அப்பனே ஆதரிப் பாய்….(47)….25-03-2008

மதுரை மதர்-அரவிந்தர் சொஸைடிக்கு செல்கையில்
—————————————————————-

அச்சம், அசூயை, அகங்கார, ஆணவ
எச்ச மிகுதியால் இவ்வுலகில் -அச்சனே!
பொய்யில் எழுதும் புலவன் எனக்குன்மெய்
செய்யுள் எழுதுசொக் கா….(48)….17-9-2010

விட்டலனைப் போல்மதுரை வீதி விளையாடி
பிட்டலைந்து தின்று பிரம்படி -பட்டவனேtumblr_ljtqdfVCcs1qf0agqo1_r1_500
எக்களங்க மும்வாரா ஏற்றம் எனக்குவர
சொக்கலிங் காயென்சொல் கா….(49)….17-9-2010

இரா.முருகனுக்கு எழுதியது
————————————-
எந்தையே உந்தன் இரண்டாம் மகனுனக்கு
முந்தை ஒருநாள் உபதேசம் -தந்தனன்
அந்த முருகன் இராமுருகன் ஆகிட
சிந்தைகொள் சங்கரா சட்னு….(50)….23-1-2009

கோளரி கோவிந்தன் நூலறி நான்முகன்
தாளறி தோளறியா தோற்றத்தில் -தீயெரி
வெற்பாய் வளர்ந்தோய் வணங்குகிறேன், பத்தினி
கற்பாய் இருந்தளி காப்பு….(51)….24-1-2009

பெண்ணுமை பாகனே கண்ணுதல் நாயகா
ஷண்மத ஸ்தாபகா சங்கரா -தண்மதி
பாகீ ரதிசூடும் நாகா பரணனே
தேஹி பவதி பிட்சாம்….(52)….28-1-200912056_468338519868554_1663975219_n

போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்
மோகம்போம் மூர்கம்போம் மும்மலம்போம் -நாகம்பூண்
நஞ்சுண்ட நாதனை நன்ணும் அடியார்க்கு
நெஞ்சுண்ட நோய்கள்போம் நீர்த்து….(53)….17-2-2009

கலைகங்கை நாகம் கமழ்கின்ற கொன்றை
மலைமங்கை கொண்டமகா தேவன் -நிலையை
சிவராத் திரியன்று சிந்தித்(து) இருப்போர்க்கு
கவிராத் திரிபகலும் காண்….(54)….23-2-2009
மகப்பேறு காண மருத்துவச்சி ஆக
அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
எல்லைதனை யாரறிவா ரே….(55)….10-3-2009

வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
சிராப்பள்ளி ஈசனைச் சேரு….(56)….10-3-2009shiv parivar-3r

ஏகனை தேவியுமை பாகனை தீந்தமிழ்ப்
பாகனை தேவார ராகனை -நாகணை
தேகனை நற்றவர்தம் யூகனை நந்திஹேச
வாகனனை வாயாற வாழ்த்து….(57)….5-4-2009

ரிஷப வாகனத்தன்று எழுதியது
—————————————–

மாடமர்ந்த கற்பகமும், கோடொடிந்த பிள்ளையும்
ஆடகச் செம்பொன் அழகனும் -கூடவர
வீடுவிட்டு வேடிக்கை மாடவீதி பார்க்கின்ற
தோடுதொட்டக் காதனைத் தொழு….(58)….5-4-2009

பாகீ ரதியைப் பிறைமான் மழுவினைom_namah_shivaya-god-825
பாகீ சதியுடன் தாங்கிடும் -த்யாகேசா
வாகனம் வாயில்லா ஜீவன் வதையுறுமே(or)
வாகனக் காளையின் வேகம் குறையுமே
நீகனம் ஆனதே னோ….(59)….5-4-2009

பிக்ஷாடணர் அன்று எழுதியது
————————————-
மெய்யடி யார்கள் மிகுந்த மயிலையில்
ஐயம் உனக்கேன் அமுதீசா -ஐயம்
விடுத்து எடுப்பாய் தொடுத்தமலர் மாலை
இடத்து உமைதோள் இட….(60)….8-4-2009

திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ்
—————————————————-
செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம்
கல்யாணம் செய்தவன் கைத்தலம் -செல்லும்
தினம்நாளை சேர்வீர் திருமயிலா பூருக்கு
இனம்ஜாதி இல்லை இதற்கு….(61)….8-4-2009images (12)

கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும்
நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ
வேதியர் மாலயன் வானோர் குழுமிட
பாதியில் பாதி பிணைந்து….(62)….9-4-2009

அன்னைக்கு தந்தைக்கு அர்த்தமதன் சொல்லுக்கு
புன்னைக்கு பூங்கொடி பெண்ணுக்கு -இன்னைக்கு
கையோடு கைகோற்கும் கல்யாண உற்சவம்
மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு….
மொய்யெழுத வாரீர் முனைந்து….(63)….9-4-2009

குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்றுunnamed
சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை
வாயாறக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை
நோயாறிப் போகும் நொடித்து….(64)….9-4-2009

திருவாதிரை அன்று எழுதியது
—————————————
பாதியுறை பார்வதி பங்கனுக்(கு) இன்றுதிரு
ஆதிரை நன்நாள் அனைவரும் -ஆதியிறை
தில்லை நடேசன் திருவடி நாடிடுவீர்
கொல்லையில் பூக்கும் களிப்பு….(65)….22-12-2010

மதுரை பேராசிரியர் ஞானசம்பந்தன் ஈற்றடிக்கு
———————————————————–

பாலமார் கண்டன் பதினாறாய் வாழ்வதற்கு
காலன் உயிர்குடித்த காளியின் -காலெனக்கு
ஏதானால் நானும்தான் எத்துவேன் கூற்றினை
பாதியின் பாதியளிப் பாய்….(66)….

N.C.ஸ்ரீதர் காளஹஸ்தி பிரார்த்தனைக்குimages (13)
————————————————-
மூளத்தீ முப்புரத்தை மூழ்கடித்த முக்கண்ணா
காளத்தி நாதரே, கண்ணப்பன் -காலொத்திக்
கண்ணைக் கொடுத்த கருணைக்கு நாயன்மார்
சின்னம் அளித்தோய் சரண்….(67)….07-05-2011

சடையில் குளிர்ந்த ஜலமும் கலையும்
இடையில் இமவான் மகளும் -உடலில்
களபம் அரனே, கதகதப்பாய் எந்தன்
உளப்பாவத் தீக்குள் ஒதுங்கு….(68)….28-01-2010

ஒதுங்கி இருந்து ஒருகாலில் தங்கச்
சதங்கை அணிந்து சபையில் -மதங்க
மகளிணைந்து ஆடும் மகாதேவன் பாதத்
துகளணிந்து நெஞ்சே துலங்கு….(69)….30-07-2011images (14)

துலங்குவெண் நீறு துனிப்பிறைக் கோடு
இலங்க ஜதியின் இசைக்கு -மலங்க
விழித்துமையாள் மண்பார்த்து வெட்க அரவக்
கழுத்தரனின் கூத்தே களிப்பு….(70)….30-07-2011

களியா திரையோன்தென் கல்லால் இறையோன்
வளிவான் நதிமதி வேய்ந்தோன் -புலியா
சனத்தில் அமர்ந்து சுகத்தில் திளைப்போன்
மனத்துப் பிணிக்கு மருந்து….(71)….30-07-2011

மருந்தவன் நீறு விருந்தவன் நாமம்
அருந்தவன் ஆடல் அழகு -பெருந்தவம்
சும்மா இருந்தந்த சோணா சலன்நினைவில்
உம்மால் முடிந்தவரை உன்னு….(72)….31-07-2011images (15)

உன்நுதற் கண்கொண்டு உற்றெனைப் பார்த்திடு
என்னிதய காமன் எரிந்திட -பின்னதை
நெற்றியில் பூசிடு நீறாய், நிகழ்ந்திடும்
வெற்றிக் குமாரசம்ப வம்….(73)….31-07-2011

வம்புக்(கு) இழுத்திடு வாயாடி கீரன்போல்
சம்புயெதிர் வந்துன்னை சந்திப்பான் -நம்பிதை
காட்டில் எரிதலினும், பாட்டால் பொசுங்கிட
ஏட்டிலுன் பேரிருக்கு மே….(74)….31-07-2011

மேய்ந்து மகளிர் முலைபற்றி மந்தமாய்
சாய்ந்து கிடக்காதே சோம்பேறி -பாய்ந்துimages (16)
வருகங்கை வீச்சை விரிகுழல் ஏந்தி
தருசங் கரன்தாள் தழுவு….(75)….31-07-2011

தழுவுசிவ மார்கம் கழுவுபவ ரோகம்
மழுவுமான் ஏந்தும் மஹேசன் -குழுவில்
அடியார்க்(கு) அடியாராய் ஆகும் பணிக்கு
துடியாய்த் துடித்தல் தவம்….(76)….31-07-2011

தவமெதற்கு தான தருமம்தான் ஏனோ
சிவமிருக்க சிந்தையில், ஜீவன் -அவமனைத்தும்
சூரியன்தன் முன்தோன்றி சூம்பிப் பனியுருகி
நீரிழந்த ஆவி நிலைப்பு….(77)….31-07-2011

நிலைப்படியில் நின்று நமனழைக்கும் நேரம்
குலப்படிப்பு கோத்திரங்கள் கூறி -களைப்படையாய்
மார்கண்டன் ஆர்த்தநஞ்சு நீர்கண்டன் பேர்சொல்ல
பார்கண்டம் போகும் பணிந்து….(78)….31-07-2011

பணிந்தாய் பதர்முன் குனிந்தாய் குதிர்முன்1780843_587204171369869_249422305_n
துணிந்தாய் எளியோரைத் தூற்ற -மனிதா!
கனிவாய் திருவல்லிக் கேணியோன் சொன்ன
பணிருத் திரத்தைப் பழகு….(79)….31-07-2011

பழகப் புளிக்கும் பெரும்பாலும் காமம்
அழகின் கதியும் அதேதான் -முழுகு
சிவாய நமவென்ற சிந்தையில் நாளும்
அவாவைம் புலன்கள் அழிவு….(80)….31-07-2011

அழிப்பது போலிருக்கும் ஆனால் அவனோ
கழித்தபின் கூட்டும் கணக்கன் -ஒழித்த
உயிரைப் பெருக்கி உலவவிட்டு ஆன்ம
பயிரை வகுக்கும் பரம்….(81)….31-07-2011

பரம்பரை கர்வம், பணத்திமிர், மோகம்
இரும்பினில் நாரெடுக்கும் இன்பம் -புரம்தனை
தீக்குள் தொலைத்தவனை பாக்குள் பிடித்திடும்
சாக்கில் சிவத்தை சுகி….(82)….31-07-2011

சுகம்பிறக்கும் முன்னால், அகம்சுரக்கும் பின்னால்images (4)
இகம்பரத்தை ஈர்க்கும் இயல்பாய் -யுகம்பொருத்து
சொக்கனாய், சங்கரனாய், சுந்தரனாய்த் தோன்றிய
முக்கண்ணன் ஈசனை மொய்….(83)….01-08-2011

மொய்யெழுதப் போனவன் மாப்பிள்ளை, தன்பெயரை
கையெழுத்துப் போடாதோன் கல்விமான் -தையெழுங்கால்
மட்டுமல்ல ஈசனருள் கிட்டுமா யின்நிற்கும்
எட்டுவித சித்தி எதிர்….(84)….01-08-2011

எதிர்படும் கூற்றின் எருமை மிரளும்
விதிர்த்தகுப்தன் ஏடு வதங்கும் -குதித்த
மறலிக்கை பாசம் மருக்கொழுந்தாய் வீசும்
திறலக்கை ஈசன் தயை….(85)….01-08-2011bhimashankar jyotirling famous shivaji temple at india pictures

தயாபரன், கங்கை மயானத்தில் செல்வோர்
பயாஅபயம் போக்கப் பரிவாய் -கயாபுரத்து
விஸ்வநாதன் கர்ணத்தில் வாசிக்கும் மந்திரத்தால்
பஸ்மமாகும் செத்தோர் பிறப்பு….(86)….01-08-2011

பிறப்பறுக்கும் நூலோன், மறக்கடிக்கும் மாலோன்
இறப்பெதிர்க்கும் சூலோன் இதுதான் -இருப்பதற்கு
எங்கும் இருந்தாலும் தங்கும் அடியார்மேல்
பொங்கும் கருணையின் பால்….(87)….01-08-2011

பாலவன் பாதிநிறம்,பச்சையவன் மீதிநிறம்
ஆலவன் ஜோதியமர் ஆசனம் -மூலவன்
ஆகம நூலவன் அல்லாது போலவன்
தேகமில் தேவனவன் தான்….(88)….01-08-2011images (17)

தான்தோன்றி ஜாலமவன், கான்தோன்றும் காலனவன்
ஆண்போன்றும் பெண்போன்றும் ஆனதவன் -”நான்”தோன்ற
ஜீவனாய் வீண்தோன்றி, ஜம்பமாய் வான்தோன்றி
தேவனாய் வந்தடைவான் தீர்வு….(or)
ஆவலாய்வந் தான்மா அவன்….(90)….01-08-2011

அவனர லிங்கம் ,அவனரி சிங்கம்
அவனலர் தங்கும் அயனும் -அவனவனி
வந்த மனிதன் விழியிமையா வானவன்
எந்த பொருளுமவ னே….(91)….02-08-2011

நேற்றின்று நாளையவன், காற்றுவான்மண் தீநீராய்
போற்றப் படுகின்ற பூதமவன் -தோற்றம்
இலாதவன், தோன்றும் கலாதரன், சொல்லிச்
சொலாதவன் ஆலில் ஜபித்து….(92)….02-08-2011images (18)

ஜபமாலை தாங்கி, சதுர்மறை ஏந்தி
அபயவர ஹஸ்தம் அமைந்து -தபஸாய்
சனகா தியர்சூழ சங்கேதம் பேசும்
முனிதக் ஷிணாமூர்த்தி மாண்பு….(93)….02-08-2011

மான்மழு சூலம் மலைமகள் பார்வதி
வான்விழு கங்கை வளர்பிறை -ஊன்தழுவ
வெள்ளி மலையேறி வாசம் புரிந்திடும்
சொல்லில் அடங்கா சிவம்….(94)….02-08-2011

சிவானந்த சாகரத்தில் சிந்தை குளிக்க
அவாவந்த ஐம்புலன்கள் ஆசு, -முவாசைகள்,
நானெ னுமகந்தை தானெனும் தற்பெருமைtrayambakeshwar-jyotirlinga-2
வீணெனவிட் டோடும் வெளுத்து….(95)….02-08-2011

வெளுத்ததெலாம் பாலாய் வழித்துண்ணும் மூடா
களித்ததால் வந்த கருப்பு -குளித்திட
எந்நாளும் போகாது உன்னாசை சொக்காயை
வண்ணானச் சொக்கன்முன் வை….(96)….02-08-2011

வைகறையில் நீராடி வாயாறத் தேவாரம்
மெய்கரைய ஓது மடநெஞ்சே -மைகரையா
வண்டு நிகர்த்த விழியாள் வலத்தினில்
கொண்ட சிவன்தாள் குனி….(97)….02-08-2011

குனிந்திடக் குட்டு துணிந்திடப் பட்டு
நினைந்திடாய் கூடாத நட்பு -அணிந்திடுவாய்OMKARESHWAR2-18082011-052309._omkareshwar-jyotirlinga-shiva-temple-khandwa-mp
மந்தா கினியை மதியை குழல்சூடும்
அந்தாள் நமச்சிவாய அஞ்சு….(98)….02-08-2011

அஞ்சை அடக்கிடலாம் அஞ்சா(து) இருந்திடலாம்
அஞ்சிரெண்டு மாதகர்பம் ஆட்படாய் -அஞ்சிலொன்றில்,
அஞ்சிலொன்றைத் தாண்டிய அஞ்சனசேய் அம்சமான
அஞ்செழுத்துக் காரன் அளிப்பு….(99)….02-08-2011

அளியினம் பூவென்(று) அணுகிடும் பாதத்
துளிமக ரந்தத்தை துய்க்க -கலிகொண்ட
அல்வினை சேரா(து) அணைத்தருளும் கற்பகச்
செல்வி கபாலி சரண்….(100)….03-08-2011….

————————————————————————————————————————–

 

படங்களுக்கு நன்றி:

http://www.hoparoundindia.com/travel-blogs/172/12-jyotirlingas-of-india—jyotirlinga-temples.aspx

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *