ஷைலஜாimages

இறுக்கிக்கட்டிச் சரமாய்
தொடுத்தபின்னும்
மணம்பரப்பும் மலர்போல
அடக்கிப்பின்னலிட்டும்
அடங்கமறுக்கும்
முன் உச்சிமுடிபோல
குடம்குடமாய் நீர்விட்டும்
மழையை விரும்பும்
மலர்ச்செடிபோல
எத்தனையோ மனிதர்கள்
அருகில் இருந்தும்
தொலைதூரத்திலிருக்கும்
உன்னையே எதிர்பார்க்கும்,
மனசு.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மனசு

 1. அருமை!.அருமை !!

  உள்ளன்பில் உள்ளவர் 
  எல்லைகள் கடந்து இருப்பினும் 
  வயிறு நிறைந்தும் 
  சுவையால் நீளும் கைபோல் 

  விலகாத மனசு  விளங்காத காதல் , நல்ல கவிதை பாராட்டுக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *