சித்திரையே வருக!

 

 

விப்ரநாராயணன்
 mainpic_L

சித்திரையே வருக—என்றன்
நித்திரை நீங்கி விழித்திட—சித்திரையே
அல்ல லுற்றேன் தெளிந்தே னல்லேன்
அலைந்து திரிந்தேன் உணர்ந்தே னல்லேன்
வல்வினைகள் சூழ்ந்தன வருந்தினேன் அல்லேன்
நல்லெண்ணங்கள் தோன்றி நன்மைகள் செய்திட—சித்திரையே

நூல்கள் பல படித்தேன் கல்வி பெறவில்லை
நூறு ஆலயங்கள் சென்றேன் பக்தி வரவில்லை
மொழிகள் பல கற்றேன் பேசத் தெரியவில்லை
விழிப்புடன் என்றும் வாழ இறைவன் அருள் பெற—சித்திரையே

நல்லோர்கள் குழுவில் சேர்ந்து நலம்பெறவும்
எல்லோருடனும் இணைந்து நற்பணிகள் செய்யவும்
கல்லாதவர்கள் கல்விகற்க துணை புரியவும்
பொல்லாதவர்கள் திருந்தி மதிநலம் பெற்றிட—சித்திரையே

இன்பம் வந்தாலும் துன்பம் வந்திடினும்
அன்புடன் சமமாய் வாழும்நிலை பெறவும்
நன்பனாய் நல்லாசிரி யனுமாய் அனைவர்க்கும்
அன்பனாய் வாழ பரந்தாமன் அருள்கிட்டிட –சித்திரையே

2 thoughts on “சித்திரையே வருக!

  1. திரு விப்ரநாராயணனின் வாழ்த்துப்பா அருமை.  வாத்தியார் மோகன் போல் இனிமேல் கவிஞர் விப்ரன்தானோ.
    சித்திரையே வருக – எங்கள்
    நித்திரை நீங்கி புத்துணர்வு பெற்றிட
    சித்திரையே வருக.

  2. சார் அருமை, இந்த புத்தாண்டில் உங்கள் கவிதையும் ஒரு  special தான்!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க