எழுத்துகளின் கதை / கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்
எழுத்துகளின் கதை குறித்து பேரா. சுவாமிநாதன் வழங்கிவரும் தொடர் உரையாடலின் நான்காவது பாகம் இது. முன்னதாக, சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துகள் குறித்தும் எகிப்திய ஹீரோகிளஃபிக் எழுத்துகள் குறித்தும் சுவாரஸ்யமான ஓர் அறிமுகத்தை அவர் வழங்கியிருந்தார்.
இந்த முறை, சீன எழுத்துகள். பண்டைய எழுத்துருக்களில் சீன சித்திர எழுத்துகளுக்கு தனிச்சிறப்பான ஓரிடம் உண்டு. குச்சி குச்சியாக நிற்கும் சீன சித்திர எழுத்துகளை நாம் பார்த்திருப்போம். இடியாப்பச் சிக்கலான இந்த மொழியை எப்படித்தான் புரிந்துகொள்கிறார்களோ என்று வியந்திருப்போம்.
சீன எழுத்துகள் எப்போது, எப்படி உருவாகியிருக்கும்? இதில் ஏ,பி,சி,டி கிடையாது என்கிறார்களே, உண்மையா? எனில், எப்படி வார்த்தைகளை உருவாக்குகிறார்கள்? எப்படி அர்த்தம் கொடுக்கிறார்கள்?
சீன எழுத்துகள் குறித்த முறையான ஓர் அறிமுகத்தை பேரா. சுவாமிநாதன், புதன் (ஆகஸ்ட் 11, 2010) அன்று அளிக்கவிருக்கிறார். ஓவியத் தன்மையுடன் விளங்கும் சீன காலிகிராஃபி குறித்தும் அவர் உரையாடுவார்.
அனைவரும் வருக!
இடம் :
கிழக்கு அலுவலகம், மொட்டை மாடி,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை, சென்னை 600018.
தொலைபேசி – 91 – 44 – 42009601
தேதி :
ஆகஸ்ட் 11, 2010
நேரம் :
மாலை 6.30