கிரேசி மோகன்

சு.ரவியும் ,நானும் பொறியியல் படிப்பதாக சொல்லிவிட்டு ‘’ரவிவர்மா, கோபுலு, சில்பிகளைப்’’ படம்படித்துக் கொண்டிருந்த காலத்தில், என் நண்பன் லாயர் சுப்புவின் ஆபீஸ் திறப்பு விழாவுக்காக ,பரிசளிக்க ஆச்சாரியாள் படத்தை பாலமுரளி கிருஷ்ணாவின் ‘’பத்ராசல கீர்த்தனை’’ டேப் பிய்ந்து போகும் அளவு கேட்டபடி வரைந்து, கூடவே கையோடு கையாக ‘ப்ரும்ம முரார்ச்சித லிங்கம்’’ எஸ்.பி.பி பாடிய மெட்டில் எழுதியது….இதை சுப்பு பாட அவன் மகன் இசையமைத்திருக்கிறான்….

 ———————————————————————-

சங்கர லிங்காஷ்டகம் – கேட்டு மகிழ!

—————————————————————————

 

ஓவியம் : கிரேசி மோகன்
ஓவியம் : கிரேசி மோகன்

சங்கர லிங்காஷ்டகம்
—————————-

”பிரும்ம முராரி சுரார்ச்சித லிங்கம்”…. மெட்டில்….
—————————————————————-

சத்சிவ சித் தானந்தன லிங்கம்
சகுண உபாசக நிர்குண லிங்கம்
புத்தி அனுக்கிரக பாரதி லிங்கம்
சத் குரு சங்கர தத்துவ லிங்கம்….(1)

தொன்மையில் சிவமாய்த் தோன்றிய லிங்கம்
தென்முகம் நோக்கிய தெய்வத லிங்கம்
சின்மயமான சிதம்பர லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(2)

ஆழ்நிலை த்யானத் தசலன லிங்கம்
அண்ட சராசர மாயா லிங்கம்
ஊழ்நாள் ஊர்த்தவ தாண்டவ லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(3)

முப்புரம் கனலெரி மூட்டிய லிங்கம்
மன்மத தகன மகாதவ லிங்கம்
அப்புவிண் வாயுமண் அக்கினி லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(4)

அயனரி அடிமுடி தேடிய லிங்கம்
அலைகலை தலைமுடி சூடிய லிங்கம்
நயன நுதலிடை நீறணி லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(5)

”கனக மகாமழை” காட்டிய லிங்கம்
குருநெறி ”மனீஷா பஞ்சக” லிங்கம்
அனுதினம் ”பஜ கோவிந்தன” லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(6)

ஷண்மத ஸ்தாபக சங்கர லிங்கம்
சத்திய சிவமய சுந்தர லிங்கம்
உன்னத அத்வை தாம்ருத லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(7)

இகபர சுகமருள் ஈஸ்வர லிங்கம்
இம்மையில் மறுமையை ஈன்றிடும் லிங்கம்
பகலென ஒளிர் பரமாத்மக லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(8)

பலஸ்ருதி
————-
ஜயஜய ஹரஹர சங்கர லிங்கம்
ஜனன மரண நிலைநீக்கிடும் லிங்கம்
தயவொடு தாயெனத் தேற்றிடும் லிங்கம்
தந்தை சதாசிவ சங்கர லிங்கம்….
————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சங்கர லிங்காஷ்டகம்

  1. நீங்களும் ரவி அண்ணாவும் – மயிலை நாட்கள் என்று புஸ்தகமே எழுதலாம் .எவ்வளவு அனுபவங்கள் . எவ்வளவு மனிதர்கள் , கவிதைகள் , ஓவியங்கள் ,விவாதங்கள் – உங்கள் பாஷையில் சொல்வதானால் உங்கள் மவுசுக்கு காரணமே அந்த Mouse தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *