இந்திய மனித வள கூட்டமைப்பு – செய்திகள்
இந்தியாவின் முன்னனி மனித வள நிறுவனங்கள் இணைந்து ‘இந்திய மனித வள கூட்டமைப்பு’ என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளன. வேலை வாய்ப்புத் துறையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், இத் துறையை ஒழுங்கு படுத்தவும் இவ்வமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியத் திட்டக் குழு ஆணையத்தின் உறுப்பினர் திரு. அருண் மைரா, 23 ஜுன் 2011 அன்று, இந்திய பணியமர்த்தும் கூட்டமைப்பு (Indian Staffing Federation) என்னும் அமைப்பை தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் பெரும்பாலான முன்னனி மனித வள நிறுவனங்கள் அனைத்தும், இக்கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர்களாக உள்ளன. மாஃபா நிறுவனத்தின் தலைவர், திரு. பாண்டியராஜன், இக்கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பணியாளர்களை நியமிப்பதற்கான மனித வளத் துறையில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவது, தர நிர்ணயத்தை உருவாக்குவது, உறுப்பினர்களுக்கான நடத்தை விதி முறைகளை ஏற்படுத்துவது என்பவையே இக்கூட்டமைப்பின் நோக்கங்கள் ஆகும்.
“எங்களுக்கு 80 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருக்கும் செயல் அனுபவத்தை உறுப்பினர்களிடையே கொண்டு வருகின்றோம். இக்கூட்டமைப்பு இந்தியாவில், வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதிலும், பணியாளர் நியமனத்திற்கான மனித வளத் துறையில் உரிய, சட்ட ரீதியான மற்றும் வரன் முறை சூழலை ஏற்படுத்த, அரசுடன் இணைந்து பணியாற்ற இக்கூட்டமைப்பு உதவும்.” என்று இக்கூட்டமைப்பின் தலைவர் திரு. பாண்டியராஜன் கூறினார்.