— சு.ரவி.

வணக்கம், வாழியநலம்

one-A433C84C-FEF4-43C3-B40C-C66B85662B48

இன்று பால்கி என்று சொல்லப்படும் பல்லக்குப் பயணம்.

ஆடிப் பட்டம் விதைத்து நடவு முடித்த விவசாயப் பெருமக்கள் பண்டரிபுரம் நோக்கி 250 கி.மீ நடைபயணம் மேற்கொள்ளும் தினம்.

மஹான்  ஞானேஸ்வர் மற்றும் மஹான் துக்காராம் ஆகியோரின் பாதுகைகளைத் தாங்கிய பல்லக்குகளை இரட்டைக் காளைகள் பூட்டிய வண்டிகள் சுமக்க, புனே நகரின் அருகில் உள்ள ஆலந்தி மற்றும் தேஹு கிராமங்களில் இருந்து புறப்பட்டுப் பந்தர்பூர் விட்டலனை ஆஷாட ஏகாதசி அன்று தரிசிக்கப் பெருந்திரளாகச் செல்லும் தினம்.

ஒரே நேரம் சுமார் பத்துப் பதினைந்து லக்ஷம் பக்தர்கள்! ஒவ்வொரு ஆணின் கையிலும் தம்புரா அல்லது டோல்கி அல்லது ஜாலரா.ஒவ்வொரு பெண்ணின் தலையிலும்  ராதையை ஆவாஹனம் செய்த துளசிமாடம்….

அனைவர் நாவிலும் விட்டலன் நாமம்..அனைவர் பாதங்களிலும்  ஒரு துள்ளல்..

வீதியெங்கும், விண்வெளியெங்கும் அபங்க முழக்கம்.

பாண்டுரங்க ஹரி! ராமக்ருஷ்ண ஹரி! என்ற கோஷம்!

இந்த பக்திப் பரவச வெள்ளத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

புகைப் படங்களையும் என் விட்டலன் ஓவியத்தையும்

பார்க்க, ரசிக்க.

two-23991446-E41A-467D-8349-FA18D957A475

three-3B10E9EE-8C28-497B-AA3B-B18F259B5702

5795E970-F685-44B6-8FA8-5424D5367122

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பால்கி என்று சொல்லப்படும் பல்லக்குப் பயணம்

  1. நெஞ்சை விட்டகலா விட்டலனின் ஓவியம் கண்டு மகிழ்ந்தேன். பகிர்ந்து கொண்ட செய்தியும் படங்களும் சிறப்பு. கே.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *