கண்ணதாசன் ஒரு சகாப்தம்
சு. ரவி
திரைப்பாடல்களில் ஒருவரியிலேயே திரைக்கதையைச் சுருக்கித் தரும் திறமையும், வளமான சொல்லாட்சியும், வற்றாத கற்பனை ஊற்றும்.. கண்ணதாசன் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார்.
“ரஸமான தத்துவம், ரஸமானதத்துவம்
ராட்சஸச் சிந்தனைகள்…..”
“சுட்டெரித்தாலிந்த மேனியும் சாம்பலாய்ச்
சுடுகாட்டு மண்ணிலுருளும்
சுவையான பாவலன் போயினான் எனச் சொல்லி
சொந்தமும் வீடுசெல்லும்…”
என்ற மரபு வரிகளிலும்,
“நாயகனைச் சிலை வடிவில் நாட்டி வைத்த சைவர்திருக்
கோயிலுக்குள் நான் போனேன் தோழீ-நிலை
கொள்ளவிலை வநதுவிட்டேன் தோழீ!”
“………………………………………………- இந்தக்
கொக்குக்குத் தேவைதன் கூரிய மூக்கினில்
சிக்கிடும் மீன் மட்டுமே-அதன்
தேவைகள் வாழட்டுமே”
“தோட்டத்திலே தென்னை இரண்டு
முற்றித் திரண்டு
பக்கம் உருண்டு”
போன்ற சிந்து நடையிலும்
“மெத்தைச் சுகத்துக்கும் மேலெழுமோர் வேட்கைக்கும்
தத்தைச் சுகத்துக்கும் தத்தளிக்கும் ஆசைக்கும்..
எத்தைத் தான் நம்புவதோ எதனைத் தான் நாடுவதோ
அங்கொருகால் இங்கொருகால் ஆடும் சிறுமனமே”
போன்ற சுயதரிசனக் கவிதைகளிலும்,
பழுத்த ஆன்மிகவாதியாகத் தன் அர்த்தமுள்ள இந்துமதம் கட்டுரைகளிலும் பலபரிமாணங்களில் மின்னிய கவியரசரை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.
” படகோடு கங்கை குகனாக வேண்டும்
பணிவான ஆசை ரகுராமா”
என்கிற அவர்தம் வைரவரிகளுக்குக் காணிக்கை யாக இந்த ஓவியத்தை சமர்ப்பிக்கிறேன்!
சு.ரவி
பாட்டுக்குள் சுடர்பவனைக் கோட்டுக்குள் படம்பிடித்த
பகலவனின் பேருடையாய் நகலதுவும் மிகநன்றே
வனவாசம் மூலம் மனவாசம் புகுந்தோரைக் காட்டும் அழகோவியங்கள். பாராட்டுகள் தங்களுக்கு.