கிரேசி மோகன்

Bhagavatha - Vamana Avatar. - Keshav
Bhagavatha – Vamana Avatar. – Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
—————————————————–

Bhagavatha - Shakatasura - Keshav
Bhagavatha – Shakatasura – Keshav

நீர்வண்ணா, வெண்ணெய்நெய் மோருண்ணும் பால்வண்ணா,
கார்வண்ணம் ஆனதன் காரணம், -போர்முன்னம்,
தன்னில் அதர்மம், தொழிலாகச் செய்ததனால்,
உன்னில் கருப்பு உதிப்பு….(265)

உன்னிலே உள்ளது, என்னிலும் உண்டது,
பின்னிப் பிணைந்தபின் பேதமேன், -கண்ணனே,
எண்ணிலா ஜீவனுள், ஏகமாய் நிற்கிறான்
கண்ணிலே கோளாறு காண்….(266)

”உப்பில்லை ஆனாலும், தப்பில்லை ஏற்றிடுவேன்,
சொப்பில் விளையாடும் சீதனத்தை” -செப்பினோய்!,
உப்பிலி அப்பனே, உன்தாள் சரணடைந்தேன்,
இப்பயலை ஏற்பாய் இசைந்து….(267)

ஆத்துமாவில் ஓர்காலும், சோத்துமாவில் ஓர்காலும்,
மாத்திமாத்தி வைக்கும் மடமனமே, -நூத்தியெட்டில்,
நின்றமர்ந்து பாம்பில், நயனம் வளர்ப்பவர்முன்,
சென்றடங்கி சும்மா சுகி….(268)

அறம்பொருள் இன்பம், அளித்திட வந்தான்,
பரம்பொருள் அன்று பலிக்கு, -வரம்பெரும்,
மோகத்தில் அம்மூன்று, மூன்றடியாய் மாறிட,
லோகப் பாதாளம் லபிப்பு….(269)

காலை எழுந்தவுடன், கண்ணன் பெயர்சொல்லி,
மூளை அடுப்பை மூட்டிடு, -மாலை,
மலைவனம் சென்றாயர் மாடுகள் மேய்க்க,
அலைபவன் பேரால் அணை(SWITCH OFF)….(270)

———————————————————————————————————-

 படங்களுக்கு நன்றி:

http://bhagavatham.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *