அழகு தமிழ் பேசிடுவோம்!

-எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

அன்புக் குழந்தைகளே
அனைவருமே கேளுங்கள்
அன்னைத்தமிழ் மொழியில்
அனைவருமே பேசிடுவோம்!

பள்ளிக்குச் சென்றுநீர்
படித்தாலும் ஆங்கிலத்தை
பாலூட்டும் தாயினிடம்
பசுந்தமிழில் பேசிடுவீர்!

தாய்ப்பாலைக் குடித்துநிதம்
தா
ன்வளர்ந்து நிற்கின்றோம்
தமிழ் மொழியில்பேசிவிடின்
தலைநிமிர்ந்து நிற்போமே!

அப்பாவென அழைப்போம்
அரவணைப்பார் ஆசையுடன்
டாடி’என  அழைக்கின்
வாடிவிடும் முகமவர்க்கு!

மடிமீது வைத்தெம்மை
மயக்குமொழி பேசிநிற்கும்
மாண்புமிகு அம்மாவை
மம்மி’யாய் ஆக்காதீர்!

அன்புக் குழந்தைகளே
ஆங்கிலத்தைப் படியுங்கள்
அதேவேளை தமிழ்மொழியை
அணைத்துமே நின்றிடுவீர்!

பிறந்தநாள் நிகழ்ச்சிகளில்
பேசுங்கள் தமிழ்மொழியில்
பெற்றவரும் உற்றவரும்
பெருமையுடன் பார்ப்பார்கள்

வெளியிலே ஆங்கிலத்தை
விட்டெறிந்து பேசுங்கள்
வீட்டிலே அன்னைமொழி
விரும்பியே பேசிடுவீர்!

எங்குநாம் வாழ்ந்தாலும்
என்றுமே தமிழர்நாம்
என்கின்ற எண்ணமதை
எள்ளளவும் மறக்காதீர்!

வென்றதமிழ் வீரத்தமிழ்
வியந்துலகு போற்றுந்தமிழ்
அந்தமொழி எங்கள்மொழி
தையுணர்ந்து நிற்போமே!

அழகுதமிழ் பேசிடுவோம்
அன்போடு நடந்திடுவோம்
ஆண்டவன் துணையிருப்பான்
னந்தமாய் இருப்போமே!

1 thought on “அழகு தமிழ் பேசிடுவோம்!

 1. அன்னைத்தமிழ்மொழிமீது அளாதி காதல் கொண்டு

  பிள்ளைகட்கு தமிழ்மொழிமேல் மோகம்வர யாத்தகவிதை

  சொல்லணைத்தும் சுகம்தரவே சுந்தரக் கவிதையென்பேன்

  “மாண்புமிகு அம்மாவை மம்மியென்றழைக்கலாமோ?”

  அருமைவரிகளிட்டு அவசியக் கருத்தை அசத்தியிருக்கின்றீர்!

  நெஞ்சிலெழும் பொறியை நினைவுகளில் அசைபோட்டு

  நித்திலக்கவிபடைக்கும் ஜெயராமசர்மா நீவீர்!

  உற்றது எதுவென்றாலும் உள்ளம்தான் ஏற்கும்

  உரைப்பது நன்மைதானே.. உயர்வே கிடைத்திடும்!!

  உண்மையொன்றை நானிங்கே உங்களுக்கு உரைக்க வேண்டும்!

  என்னையும்கூட ஏதேதோ தலைப்பினில் எழுதத்தான் வைக்கின்றீர்!

  நன்றிகளுடன்.

  காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published.