பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

 karna

பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு

துரோணர்

 

ஏகலைவனிடம்

கட்டைவிரல்வாங்கிய

காரியவாதி

 

நிழலைவணங்கி

நேர்மையாய் வளர்ந்த

ஏகலைவனுக்குத்

துரோகம்செய்த

துரோகி

 

வேடம்போடத்தெரியாத

வேடனுக்கு

துரோணர் குரு துரோகி

துரோகி குரு

 

அவரிடம் கற்ற

அரசகுமாரர்களில்

தனித்தும்

தினித்துவத்தோடும்

விளங்கினான் அர்ச்சுனன்

 

கற்றதில் கவனமும்karna-life

குரு பக்தியும்

நிறைந்தவன் அர்ச்சுனன்

 

குருவிடம் கற்ற

வித்தைகளை அரங்கேற்றும்

நிகழ்வு நடந்தது

மன்னர்கள்

மன்னர்கள் அறிஞர்கள் ஆசிரியர்கள் சான்றோர்கள்

படைக்கல வல்லவர்கள் வல்லுநர்கள் மற்றும்பலர்

முன்னிலையில்

அரங்கேற்றினர் வித்தைகளை

 

அனைவரும் வியக்க

அர்ச்சுனன்

வித்தைகள் காட்டினான்

வில்லால்

 

துரோகத்தின் வடிவம்

துரியோதனன்

அர்ச்சுனனின் ஆற்றலைக்கண்டு துடித்தான்

பொறாமையால்

பொங்கிவழிந்தான்

 

அர்ச்சுனனைக் கண்டு

திடீர்மின்னலாய்

கர்ஜித்தான் கர்ணன்

 

வில்லெடுத்து என்னோடு

வித்தைகாட்டென்றான்

 

சபையில் சலசலப்பு

துரியோதனனுக்கு

உள்ளத்தினுள்ளே

கிளுகிளுப்பு

 

கரடிபோல் கர்ணன்

வந்தாய் எண்ணி

முகவரி கேட்டார்கள்

 

 

மக்கள் முன்னிலையில்

திறன்காட்டவிடாமல்

தகுதிகேட்டும்

குலம்கேட்டும்

குற்றவாளியாக்கினார்கள்

 

சூரியனுக்குப் பிறந்தவனை

சூதகனுக்குப்பிறந்தவனா?

ஏளனம் செய்தார்கள்

 

தேரோட்டி மகனா?p13

எங்கள்முன் நிற்பது?

எங்களைப் போருக்கு அழைப்பது?

துள்ளிக்குதித்தார்கள்

எள்ளிநகைத்தார்கள்

கர்ணனை

மனம்குமையவைத்தார்கள்

 

குலம்கேட்ட கொடுமையால்

கர்ணன்

முகவரி சொல்லமுடியாமல்

முகம்வாடிப்போனான்

 

காலம்கருதி

ஞானமிகுக் கேள்விக்கணைகளைக்

கேட்டான் துரியோதனன்

 

பிறப்பில் இல்லை பெருமை

செய்யும் செயலில்தான்

உள்ளது பெருமை என்றான்

 

அங்கதேசத்து அரசகுமாரனாக்கி

அறிவித்தான்

அரவணைத்தான் துரியோதனன்

 

 

பகலவன் மறைந்ததால்

அரங்கேற்றம் முடிந்தது

 

எனினும்

கர்ணனுக்காக

தாய்க்குப்பிறக்காத குருவும்

தந்தைக்குப்பிறக்காத

தந்தைமுனிலையில்

பாண்டுக்குப்பிறக்காத

பாண்டவர்களுமா?

கர்ணனைக் குலம்கேட்பது? என

ஒருகேள்வி கேட்டிருந்தால்

என்னபதில் கிடைத்திருக்கும்?

 

(தமிழ்ப்பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன்,பேராசிரியர் தி.வேங்கடகிருஷ்ணயங்கார்,

இலக்கியத்தென்றல் வ.ஜோதி எழுதிய ம்காபாரத உரைபடித்துக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட சிந்தனையில் விளைந்த கவிதை. 20.05.2014)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கர்ணனுக்காக ஒரு கேள்வி !

  1. படிக்கப் படிக்கச் சிந்தனையைக் கிளறுவது மகாபாரதம். எண்ணற்ற வார்த்தை வீச்சுகளும், சாகஸங்களும், உறவு முடிச்சுகளும், தத்துவச் சிக்கல்களும், தந்திரங்களும் நிறைந்த காவியம். உரையைப்படித்த உங்களிடமிருந்து கேள்வி வடிவில் ஒரு கவிதையை உடன் அது கொணர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை!

    -ஏகாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.