பெளர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்…
–கவிஞர் காவிரிமைந்தன்.
கன்னிப்பெண் திரைப்படத்திற்காக நடிகர் சிவக்குமார் வெண்ணிற ஆடை நிர்மலா இணைசேர.. கவிஞர் வாலி எழுதிய பாடலுக்கு மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி பாடியிருக்கிறார்கள். முழுமையான மெல்லிசைப் பாடலிது என்று முழங்குகிறது இசை!
அழகிய கவிதைக்கு ஆபரணம் பூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர்! சொல் இனிதா.. இசைச் சுவை இனிதா என்று தரம்பிரிக்க முடியாத அளவு சுகம் சேர்த்திருக்கிறார்கள் பாடிய இருவரும்!
திரைப்படம் வந்து ஓடிய பின்னரும் திரைப்பாடல் மக்கள் மனதில் ரீ்ங்காரமிடுவதற்கு காரணம் என்ன என்று கேட்டால்.. இதுபோன்ற பாடல்களை எவர்தான் கேட்க மறுப்பார்? இசையால் இதயம் ஈர்த்து தமிழ்ச் சொற்களால் சொக்க வைக்கும் அற்புதம் திரைத்துறையில் அமைதியாக நடந்து கொண்டே இருக்கிறது. அதற்கு கவிஞர்களும் இசையமைப்பாளர்களும் பாடக பாடகியரும் பெரிதும் காரணமாகிறார்கள் என்பதை இங்கே பதிவு செய்ய தக்கதொரு பாடலிது என்பேன்!
சுகம் சுகமாய் பயணம் செல்ல.. வாழ்க்கை முழுவதும் இதுபோன்ற பாடல்களை கேட்டுக் கொண்டே தூரத்தை மறக்கலாம்! இன்பஸ்வரங்களை எழுதிக்காட்டும் கவிஞர்கள்.. நம் இதயம் மீட்டும் இசையமைப்பாளர்கள்.. தமி்ழ்த்திரையில் கொடிகட்டிப்பறந்ததற்கு இப்பாடல் ஒரு சாட்சியாகும்!
http://www.youtube.com/watch?v=psge_FCFjVA
காணொளி: http://www.youtube.com/watch?v=psge_FCFjVA
பாடல்: வாலி
படம்: கன்னிப்பெண்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகிபௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மெளனத்தின் மொழியில் மயக்கதின் நிலையில்
கதை கதையாக படிப்போமா..கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ மதுரையிலே
பிள்ளைத் தமிழோ மழலையிலே – நீ
பேசும் தமிழோ விழிகளிலே..நெஞ்சம் முழுதும் கவிதையெழுது
கொஞ்சும் இசையில் பழகும்பொழுது
துள்ளும் இளமை பருவம் நமது
தொட்டுத் தழுவும் சுகமோ புதிது
கண்பார்வையே உன் புதுப்பாடலோ
பெண் வீணையே உன் பூமேனியோபிள்ளைப் பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னிப் பருவம் என் வடிவில்
காலம் முழுதும் உன் மடியில்..பன்னீர் மழைதான் விழிமேல் பொழிய
தண்ணீர் அலைபோல் குழல்தான் நெளிய
தன்னந் தனிமை தணல்போல் கொதிக்க
தஞ்சம் புகுந்தாள் உனைத்தான் அணைக்க
பொன்னோவியம் என் மன மேடையில்
சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்..